தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. டிகிரி தகுதி தான்.. சூப்பர் சான்ஸ்! விண்ணப்பிக்க ரெடியா

  • சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு நாடுமுழுவதும் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கியை பொறுத்தவரை காலிப்பணியிடங்களை உரிய தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.

    Advertisement

    அந்த வகையில் தற்போது ரிலேஷன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:-

    பணியிடங்கள் விவரம்:

    ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஸ்கேல் II
    ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஸ்கேல் I
    புராடாக்ட் ஸ்பெஷலிஸ்ட் - டிரேடு ஃபைனான்ஸ்

    கல்வித் தகுதி:

    ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்று இருந்தால் போதும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும். 60 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். பணி அனுபவத்தை பொறுத்தவரை வங்கி துறைகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

    Advertisement

    புராடாக்ட் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு டிகிரி முடித்து இருக்க வேண்டும். டிரேடு ஃபைனான்ஸ் சார்ந்த பணிகளைக் கையாள்வதில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    35 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 03.08.2026 கடைசி நாளாகும்.

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://apps.tmbdigital.bank.in/tmb_careers/

    English Summary

    Tamilnad Mercantile Bank Job: A job notification has been released by Tamil Nadu Mercantile Bank. Vacancies for the position of Relationship Manager are set to be filled. Candidates who have completed a degree in any discipline are eligible to apply for these positions.