சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும், தேர்வு முறை எப்படி என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மெர்கண்டைல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். உதவி மேனேஜர் (விவசாயத்துறை அதிகாரி), மேனேஜர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விவசாயத்துறை அதிகாரி பணியிடத்திற்கு விவசாயம் பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். வங்கிப்பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். மேனேஜர் பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ரிசர்வ் வங்கியால் பட்டியலிட்டப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பானது 31.10.2026 அன்று தேதிப்படி கணக்கில் கொள்ளப்படும். விவசாயத்துறை அதிகாரி பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 10.11.2026 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பை படிக்க: https://apps.tmbdigital.bank.in/பணியிடங்கள் விவரம்
கல்வித் தகுதி:
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேனேஜர் வேலை.. யார் யார் விண்ணப்பிக்க முடியும்?
வயது வரம்பு:
தேர்வு முறை:
Post Office Job: தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை.. மாதம் 63,000 சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க