தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. சென்னையிலேயே பணியிடம்! பிஇ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

  • சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி, சாப்ட்வேர் என்ஜினியர், சாப்ட்வேர் புரோகிராமர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பி.இ, எம்சிஏ, முதுகலை பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். இது குறித்து விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி. நாடு முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    Advertisement

    மெர்கண்டைல் வங்கியில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், சிறப்பு அதிகாரி (ஐடி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    சிறப்பு அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) - (மென்பொருள் டெவலப்பர், டேட்டா சயிண்டிஸ்ட், புள்ளியியலாளர், CBS சப்போர்ட் என்ஜினியர்ஸ், சாப்ட்வேர் என்ஜினியர், சாப்ட்வேர் புரோகிராமர், ஆரக்கிள் ஹெ.சி.எம்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    கல்வித் தகுதி:

    கல்வித் தகுதியானது பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். பிஇ/ பிடெக், எம்.சி.ஏ, முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. சில பணியிடங்களுக்கு அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை பணி அனுபவமும் அவசியம். கல்வித் தகுதி பற்றிய விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் விரிவாக தெரிந்து கொள்ள முடியும்

    Advertisement

    வயது வரம்பு:

    சாப்ட்வேர் டெவலப்பர் - 35 (வயதுக்குள்)
    டேடா சயிண்டிஸ்ட் - 35 (வயதுக்குள்)
    Statistician - 35 (வயதுக்குள்)
    சாப்ட்வேர் டெவலப்பர் - 30 (வயதுக்குள்)
    சிபிஎஸ் சப்போர்ட் என்ஜினியர்ஸ் - 30 (வயதுக்குள்)
    சாப்ட்வேர் என் ஜினியர்: சாப்ட்வேர் புரோகிராம்ஸ் - 30 (வயதுக்குள்)
    ஆரக்கிள் ஹெ.சிஎம் - 30 (வயதுக்குள்)

    தேர்வு முறை:

    தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.08.2026 ஆகும்.

    Advertisement

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here

    English Summary

    Tamilnad Mercantile Bank Job: A recruitment notification has been issued by Tamilnad Mercantile Bank. Various positions, including Specialist Officer, Software Engineer, and Software Programmer, are being filled. Candidates who have completed B.E. or MCA are eligible to apply for these roles. Those selected will be posted in Chennai. Here are the details.