தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி?

  • சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேளாண்மை பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூன் 6, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 4 ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    பணியிடங்கள்:

    வேளாண்மை அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எத்தனை பணியிடங்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை மருத்துவம், பால் அறிவியல் (Dairy Science), வேளாண் பொறியியல் போன்ற துறைகளில் சிறப்புப் படிப்பு முடித்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

    அனுபவம் / தகுதி: வங்கி, பிராந்திய கிராம வங்கி (RRB) அல்லது ஏதேனும் நிதி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    Advertisement

    வயது வரம்பு:

    30.04.2026 அன்று தேதிப்படி 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுகள் நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் அடிப்படையிலோ நடைபெறும்.

    விண்ணப்பிப்பது எப்படி?

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். 22.05.2026 முதல் 06.6.2026 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tmb.bank.in/ -ல் 'Careers' என்ற பேஜ்ஜை கிளிக் செய்து தேர்வு அறிவிப்பினை பார்க்கலாம். அதன்பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பிற விவரங்கள்:

    * விண்ணப்பதாரர்கள் மின்னணு (e-Application) விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.
    * வயது சான்றாக, சுய சான்றொப்பமிடப்பட்ட (Self-attested) எஸ்.எஸ்.எல்.சி. அல்லது மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியல் / மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) நகல்.

    Advertisement

    * சுய சான்றொப்பமிடப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்கள் நகல்.
    * முந்தைய பணியிடங்களுக்கான அனுபவச் சான்றிதழ் மற்றும் பணிவிடுவிப்பு கடிதம் (Relieving Letter).
    * கடைசி மாத சாலரி ஸ்லிப் (Salary Slip). ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    English Summary

    Tamilnad Mercantile Bank has invited applications for Agricultural Officer posts. Candidates with a degree in Agriculture and at least three years of relevant experience can apply online. The last date to submit applications is June 6, 2026, through the bank's official website.