டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சென்னையில் ஜூலை 11ம் தேதி இண்டர்வியூ

  • சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 'வீக்எண்ட் வாக்இன் டிரைவ்' அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 11ம் தேதி முதல் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

    Advertisement

    டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அப்ளிகேஷன் பேக்கேஜிங் (Application Packaging) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Advertisement

    இந்த பணிக்கு அப்ளிகேஷன் பேக்கேஜிங் (எம்எஸ்ஐ, அப்-வி, எம்எஸ்ஐஎக்ஸ்) பணிக்கு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பேக்கேஜ் குவாலிட்டி அசூரன்ஸ் டெஸ்ட்டிங் மற்றும் வேலிடேஷன் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    டெப்ளாய்மெண்ட் டூல்ஸ் (SCCM/Intune/AdminStudio), இன்ஸ்டாலேஷன், அப்கிரேட், பேட்ச்சிங், ரோல்பேக், அன்இன்ஸ்டால் வேலிடேஷன் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அப்ளிகேஷன் கம்படிபிலிட்டி மற்றும் டிபென்டென்ஸி அனலிசிஸ் புரிதல் இருக்க வேண்டும். விண்டோஸ் 10, 11 பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

    Powershell/VBScript உள்ளிட்டவற்றில் நல்ல ஸ்கிரிப்டிங் அறிவு பெற்றிருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் ட்ரபிள்சூட்டிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

    Advertisement

    இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுலை 11ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு விண்ணப்பங்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: TCS weekend walk in drive application packaging on July 11. 5 to 10 years experience candidates can apply for this roles.