டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. ஜூலை 18ல் இண்டர்வியூ

  • ஹைதராபாத்: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூலை 18 ம் தேதி காலை 9 மணிக்கு இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

    Advertisement

    டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Mulesoft Developers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    இந்த பணிக்கு Mulesoft Anypoint பிளாட்பார்ம் டெவலப்மென்ட் , ஏபிஐ லீட் கனெக்டிவிட்டி மற்றும் இன்டிகிரேஷன் டிசைன் தெரிந்திருக்க வேண்டும்.

    எண்ட் டூ எண்ட் Mulesoft இம்ப்ளிமென்டேஷன் அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். RESTful மற்றும் Soap வெப் சர்வீசஸ் டெவலப்மென்ட் இருக்க வேண்டும். ஏபிஐ டிசைன் பயன்படுத்தி ஆர்ஏஎம்எல்/ஓபன் ஏபிஐ ஸ்பேஷிபிகேஷன் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், Mule 4 Development மற்றும் டெப்ளாய்மெண்ட், டேட்டாவீவ் பயன்படுத்தி டேட்டா டிரான்ஸ்ஃபார்மேஷன் தெரிந்திருக்க வேண்டும்.

    Anypoint studio, API Manager, Runtime manager மற்றும் எக்ஸ்சேஞ்ச் தெரிந்திருக்க வேண்டும். சிஐசிடி, வெர்ஷன் கண்ட்ரோல் (Git), டெவலப்மெண்ட் பெஸ்ட் பிராக்டீஸ், டிரபிள் சூட்டிங், பெர்பாமன்ஸ் டியூனிங் மற்றும் சப்போர்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் கட்டாயமாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 13 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஆன்லைனில் இண்டர்வியூ என்பது கிடையாது.

    இதற்கான இண்டர்வியூ ஜூலை 18 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பிறகு இண்டர்வியூவிற்கான இடம் உள்பட பிற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: TCS recruitment for Mulesoft Developers roles in Hyderabad. 5-13 years experience candidates can apply for this roles. Interview to be held on July 18.