ஜூலை 18 ம் தேதி இண்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு


  • ஹைதராபாத்: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வரும் ஜூலை 18 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Service Now HRSD Consultants பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இந்த பணிக்கு சர்வீஸ்நவ் எச்ஆர் சர்வீஸ் டெலிவரி கான்பிகரேஷன் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிந்திருக்க வேண்டும். எம்பிளாய் சென்டர்/எம்பிளாய் சர்வீஸ் சென்டர் இம்பிளிமென்டேஷன் தெரிந்திருக்க வேண்டும்.

    எச்ஆர் கேஸ் மேனேஜ்மென்ட் மற்றும் எச்ஆர் நாலேட்ஸ் மேனேஜ்மென்ட் தெரி்திருக்க வேண்டும். லைப்சைக்கிளி இவென்ட்ஸ் (ஆன்போர்டிங், ஆஃப்போர்ட்டிங், எம்பிளாய் டிரான்டிஷன்) தெரிந்திருக்க வேண்டும். Flow Designer, Business Rules, Client Scripts மற்றும் நோட்டிபிகேஷன் உள்ளிட்டவை தெரிந்திரக்க வேண்டும்.

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஆன்லைனில் இண்டர்வியூ என்பது கிடையாது.

    Advertisement

    இதற்கான இண்டர்வியூ ஜூலை 18 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பிறகு இண்டர்வியூவிற்கான இடம் உள்பட பிற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: TCS recruitment for Servicenow HRSD Developer roles in Hyderabad. 5-13 years experience candidates can apply for this roles. Interview to be held on July 18.