சென்னை – பெங்களூர் உள்பட 5 இடங்களில் வேலைவாய்ப்பு.. அழைக்கும் TCS.. ஜூலை 17ல் ஆன்லைனில் இண்டர்வியூ

  • சென்னை: சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது PAAS Oracle Integration Cloud பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 8 ஆண்டு முதல் அதிகபட்சமாக 15 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Advertisement

    இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி டிசைன், டெவலப், சப்போர்ட் கிளவுட் அடிப்படையில் ஸ்கில்ட் ஆரக்கள் இன்டகிரேஷன் கிளவுட் (OIC) சீனியர் டெவலப்பர் பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.

    ஆரக்கள் இன்டிகிரேஷன் கிளவுட், பைல் டிரான்ஸ்பர், என்கிரிப்ஷன், பிஜிபி, செட்யூலிங் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். செக்யூரிட்டி புரோட்டோகால் OAuth, JWT, SSL, API Security உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இஆர்பி கிளவுட், எச்சிஎம் கிளவுட், ரெஸ்ட், SOAP, FTP, டேட்டாபேஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். DevOPS Practices in cloud integrations ஆரக்கள் இன்டிகேரஷன் கிளவுட்/ ஓசிஐ பற்றிய சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான இண்டர்வியூ ஜூலை 17 ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: TCS walk in drive PAAS Oracle Integration Cloud on July 17. Selected candidates chennai. Candidates selected for the roles will be posted in locations including Chennai, Bengaluru, Hyderabad, Pune, and Mumbai.