B.Com, M.com முடித்தோருக்கு ஐடி நிறுவனத்தில் வேலை.. அழைக்கும் டிசிஎஸ்.. நாளை இண்டர்வியூ

  • சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    Advertisement

    தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் Procure To Pay என்ற பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். குறிப்பாக பிகாம், எம்காம் அல்லது அதனுடன் தொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    Advertisement

    Accounts Payables Processing Vendor Invoice Processing உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

    இதுதவிர ஸ்கில் என்பது பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்டிங், பிடிபி தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் 3 முதல் 5 ஆண்டு FnA domain in PTP (Accounts Payable) இருந்தால் சிறப்பு. அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

    Advertisement

    ஷிப்ட் மதிய வேளையில் தொடங்கும். இதனால் நைட் ஷிப்ட் மற்றும் ரோட்டேஷனல் ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் EP ID கட்டாயம் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

    இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஆகஸ்ட் 8) காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்போர் Tata Consultancy Services Ltd, Chennai One, Thoraipakkam 200 Ft Road, Thoraipakkam, Chennai - 600 097, Tamil Nadu என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

    Advertisement

    இண்டர்வியூ செல்வோர் Resume, TCS application form, ஆதார் மற்றும் பான்கார்டின் 2 ஜெராக்ஸ்,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். EPCN நம்பர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: An interview will be held tomorrow at the TCS IT company in Chennai from 10:00 AM to 12:30 PM. Eligible and interested candidates may attend the interview in person.