TCS நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. ஜுலை 4ம் தேதி இண்டர்வியூ.. செம சான்ஸ்

  • சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜுலை 4ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

    Advertisement

    டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Python + Pyspark with AWS/Azure பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Advertisement

    பைத்தான், Pyspark ஸ்கிரிப்டிங் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். Spark UI/Optimization/Debugging டெக்னிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்மிடியேட் SQL எக்ஸ்போசர், Subquery, Joins, CTE's தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் டெக்னாலஜிஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

    பிசினஸ் மற்றும் IT ஸ்டாக்ஹோல்டர்ஸ் உடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், தெரிந்திருக்க வேண்டும். புராஜெக்ட் மற்றும் எஃபர்ட்ஸ் எஸ்டிமேஷன் உள்ளிட்டவற்றில் பிளானிங் எக்ஸிக்யூஷன் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். Data Vaul, Data Mesh, Data Fabric Architecture Patterns, Agile உள்ளிட்டவற்றில் எக்ஸ்போசர் இருக்க வேண்டும்.

    Advertisement

    தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான இண்டர்வியூ ஜுலை 4ம் தேதி நடைபெற உள்ளது.

    இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS Deccan Park - ODC - GS1, GS2, GS3 Near Cafeteria Plot No.1, Software Units Layout, Hitech City Main Raod, HUDA Techno Enclave, Madhapur, Hyderabad, Telangana 500 081 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    TCS IT Jobs 2026: TCS walk in drive for Python + Pyspark with AWS/Azure roles. Interview to be held on July 4.