மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு

  • சென்னை: நெல்லை மாவட்ட சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், லேப் டெக்னிஷியன், சுகாதார ஆய்வாளர், ஸ்டாப் நர்ஸ், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 82 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

    Advertisement

    நெல்லை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 82 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    மருத்துவ அலுவலர் - 03 பணியிடங்கள்
    நகர்ப்புற சுகாதார செவிலியர் / துணை செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் - 30 லேப் டெக்னிஷியன் - 03
    சுகாதார ஆய்வாளர் - 02
    ஸ்டாப் நர்ஸ் - 03
    மருத்துவமனை பணியாளர் - 12
    தூய்மை பணியாளர் - 02
    ஓட்டுநர் (Driver) - 01
    இடைநிலை சுகாதார வழங்குநர் - 02
    பாதுகாவலர் - 01
    CEmONC பாதுகாப்பு காவலர்கள் - 03
    சமூகப் பணியாளர் - 02

    என 19 வகையான பிரிவுகளில் மொத்தம் காலிப்பணியிடங்கள்: 82 உள்ளன.

    Advertisement

    கல்வித் தகுதி:

    பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். 8 ,10 ஆம் வகுப்பு, ஏ.என்.எம், எம்பிஹெச்டபிள்யூ, டிஎம்.எல்.டி, டிஜிஎன்.எம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மற்றும் பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

    சம்பளம் எவ்வளவு?

    மருத்துவ பணியாளர் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் கிடைக்கும். எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள். லேப் டெக்னிஷியன் பணிக்கு ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். சமூக பணியாளருருக்கு ரூ.23,800 வழங்கப்படும்.

    ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். ஸ்டாப் நர்ஸ் பணிக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். தூய்மை பணியாளருக்கு ரூ.8,500, டிரைவர் பணிக்கு ரூ.13,500 வழங்கப்படும்.

    Advertisement

    விண்ணப்பிப்பது எப்படி?

    திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. இவை முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.05.2026 முதல் 05.06.2026 வரை அன்று மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

    இதற்கான விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Advertisement

    மாவட்ட சுகாதார அலுவலகம்,
    எண்.16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு,
    சமாதானபுரம்,
    பாளையங்கோட்டை, - 627002

    நிபந்தனைகள்

    1. இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்)
    2. இப்பணியிடங்கள் எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
    3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும்.
    4. 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
    5. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

    English Summary

    Tirunelveli Health Department has invited applications to fill 82 vacancies, including Medical Officer, Staff Nurse, Lab Technician, Health Inspector and support staff posts. Selected candidates will receive salaries of up to Rs 60,000 per month. Eligible applicants can apply as per notification guidelines.