சென்னை: திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செவிலியர், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், உளவியலாளர் உள்ளிட்ட பல பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.27 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று இங்கு காணலாம்.
திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 25 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ANM/UHN, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், தொழில்சார் சிகிச்சை நிபுணர், சிறப்பு கல்வி பயிற்றுநர் (நடத்தை சிகிச்சை), உளவியலாளர், கணக்கு உதவியாளர், சித்த மருந்து வழங்குநர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் நிலை-II, இடைநிலை சுகாதார சேவை வழங்குநர், மனநலச் செவிலியர், மருத்துவ உளவியலாளர், பொதுச் செவிலியர் மற்றும் ANM உள்ளிட்ட 15 வகையான பதவிகளுக்கு மொத்தம் 25 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பணிக்கு தகுந்தபடி கல்வித் தகுதியானது மாறுபடும். 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் தொழில்முறை பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். ANM/UHN மற்றும் ANM பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ANM படிப்பு அவசியம். பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளருக்கு (MPHW) 8ஆம் வகுப்பு தேர்ச்சி, ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநருக்கு (Lab Technician) DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு கல்வி பயிற்றுநர் (நடத்தை சிகிச்சை) பணிக்கு UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழங்களில் D.Ed/B.Ed/M.Ed (Special Education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவுசார் மற்றும் வளர்ச்சிசார் குறைபாடுகளில் B.Ed/M.Ed சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு பதவிகளுக்கு தகுந்தபடி மாறுபடும். பெரும்பாலும் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ANM/UHN - ₹17,500, விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் (Shortlisting) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள், திருப்பத்தூர் DHS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirupathur.nic.in/-இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயல் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 13, 2026 ஆகும். விண்ணப்பிக்கும் முன், முழுமையான அறிவிப்பில் உள்ள தகுதி விதிமுறைகளை கவனமாகப் படிப்பது அவசியம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், வயதுச் சான்று, கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் சுயசான்றொப்பமிடப்பட்ட நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை ஓர் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை செயல்பாட்டில் வைத்திருப்பது கட்டாயம். மேலும் தகவல்களுக்கு, திருப்பத்தூர் DHS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirupathur.nic.in/ ஐப் பார்வையிடலாம்.பணியிடங்கள் விவரம்:
கல்வித் தகுதி:
வயது வரம்பு:
சம்பளம் எவ்வளவு:
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - ₹11,000,
ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் - ₹17,000,
தொழில்சார் சிகிச்சை நிபுணர் - ₹23,000,
சிறப்பு கல்வி பயிற்றுநர் - ₹17,000,
உளவியலாளர் - ₹27,000,
கணக்கு உதவியாளர் - ₹19,000,
சித்த மருந்து வழங்குநர் - ₹18,000,
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் நிலை-II -
இடைநிலை சுகாதார சேவை வழங்குநர் - ₹21,000,
மனநலச் செவிலியர் - ₹21,000,
மருத்துவ உளவியலாளர் - ₹27,000,
பொதுச் செவிலியர் - ₹21,000, ANM - ₹14,000.தேர்வு முறை:
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
சேர்மன் லட்சுமணன் தெரு,
நகராட்சி அலுவலகம் அருகில்,
திருப்பத்தூர் - 635601.விண்ணப்பிக்க கடைசி நாள்: