TNPSC: குரூப் 1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி! அரசு அதிகாரி ஆகணுமா? உடனே அப்ளை பண்ணுங்க

  • சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 26 முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட உள்ள தேர்வு அறிவிப்புகள் பற்றி முந்தைய ஆண்டிலேயே ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடும் டிஎன்பிஎஸ்சி அதற்கேற்ப பணியிடங்களை நிரப்புவது வழக்கம்.

    Advertisement

    அந்த வகையில், ஏற்கனவே வெளியிட்ட ஆண்டு அட்டவணைப்படி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    துணை ஆட்சியர், உதவி ஆணையர், துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கம்), மாவட்ட பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    கல்வித்தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    குறைந்தபட்சம் 21 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். துணை ஆணையர் (வணிக வரி) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிஎல் பட்டம் பெற்று இருந்தால் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    தேர்வு முறை:

    முதல் நிலைத்தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வர்கள் 30.06.2026 முதல் 29.07.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    தேர்வு எப்போது நடைபெறும்?

    தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -I (தொகுதி I பணிகள்) - க்கான முதல் நிலைத் தேர்வு 06.09.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க: Click Here

    English Summary

    TNPSC Group 1: TNPSC has released the Group 1 Notification 2026 to fill 26 vacancies, including Deputy Collector, Assistant Commissioner, and District Registrar posts. Graduates aged 21 to 34 years can apply online from June 30 to July 29, 2026. The preliminary examination is scheduled for September 6, 2026.