TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி.. காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

  • சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 (TNPSC Group 1) மற்றும் குரூப் 2, 2ஏ பணிக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். மேலும் காலியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்தக் கோரியும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையினை கூடுதலாக 20 அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு அட்டவணை வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

    Advertisement

    காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

    வெளியிடப்பட உள்ள தேர்வு அறிவிப்புகள் பற்றி முந்தைய ஆண்டிலேயே டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடும். அந்த வகையில், ஏற்கனவே வெளியிட்ட ஆண்டு அட்டவணைப்படி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பணியிடங்கள் என்ணிக்கை மிக குறைவாக இருப்பதாகவும், பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தான் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. அதிலும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக வரும் என எதிர்பார்த்த தேர்வர்களுக்கு அதிலும் ஏமாற்றமே வந்தது. மொத்தம் 821 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    Advertisement

    குரூப் 1 பணியிடங்கள் மற்றும் குரூப் 2 பணியிடங்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தததால் குரூப் 4 தேர்வு பணியிடங்களும் ஆயிரம் தான் வரும் என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில் திடீர் சர்ப்ரைசாக குரூப் 1 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது கூடுதலாக 20 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த 26 மற்றும் தற்போது 20 என மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி தேர்வர்கள் கோரிக்கை வைத்து நிலையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    உதவி ஆணையர், துணை ஆட்சியர், துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கம்), மாவட்ட பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் என பல்வேறு பதவிகளில் மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு:

    குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். துணை ஆணையர் (வணிக வரி) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிஎல் பட்டம் பெற்று இருந்தால் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    தேர்வு முறை:

    முதல் நிலைத்தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -I (தொகுதி I பணிகள்) - க்கான முதல் நிலைத் தேர்வு 06.09.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    TNPSC Group 1: Aspirants had expressed dissatisfaction that the number of vacancies announced for TNPSC Group 1 and Group 2/2A posts was lower than in the previous year and had been consistently demanding an increase in the number of vacancies. Against this backdrop, the TNPSC has increased the number of Group 1 posts to 46.