டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.. பணியிடங்கள் 846 ஆக அதிகரிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

  • சென்னை: கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதலில் 821 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் பணியிடங்களை அறிவித்து மொத்தம் 846 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தேர்வர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதன்படி தேர்வு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் குரூப் 2, 2 ஏ-க்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது.

    Advertisement

    பணியிடங்கள் அதிகரிப்பு

    முதலில் குரூப் 2 பிரிவில் 41 பணியிடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 780 காலியிடங்களும் என மொத்தம் 821 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. குரூப்​-2, 2-ஏ தேர்​வில் புதிய பணி​யிடங்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. அதோடு காலி​யிடங்​களின் எண்​ணிக்​கை​யும் உயர்த்​தப்​பட்​டுள்ளது.

    குரூப்-2 ஏ தேர்​வில் தமிழ்​நாடு தலை​மைச் செயலக உதவி​யாளர் (நி​திப்​பிரிவு) காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 7-லிருந்து 17 ஆக அதி​கரிக்​கப்​படு​கிறது. பின்னர் குரூப்-2 தேர்​வில் குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு பணி​கள் துறை நன்​னடத்தை அலு​வலர் என 2 புதிய பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதே போன்று குரூப்-2 ஏ தேர்​வில், தொழிற்​கூட்​டுறவு சங்கங்​களின் மேற்​பார்​வை​யாளர் - 10 பணியிடங்கள், குழந்​தைகள் நலன், சிறப்பு பணி​கள் துறை உதவி​யாளர் - பணியிடங்கள் 3, ஆகிய பதவி​கள் புதி​தாக சேர்க்​கப்​பட்டு மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 846 ஆக அதிகரித்தது.

    Advertisement

    இப்பணியிடங்களுக்கான விண்ணப் பதிவு கடந்த மாதமே தொடங்கிய நிலையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் இன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

    கல்வித் தகுதி:

    டிகிரி முடித்து இருப்பவர்கள் இப்பணியிடங்களுகு விண்ணபிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவவரை குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும்.

    தேர்வு நடைமுறை

    ஆன்லைன் வழியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தகுதி பெற 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்வர்.

    Advertisement

    குரூப்-2 பதவிகளுக்கு விரித்துரைக்கும் வகையில், தமிழ் தகுதி தாள் தேர்வு, பாடத் தேர்வு நடக்கும். குரூப்-2 ஏ பதவிகளுக்கு தமிழ் தகுதி தாள் தேர்வு விரித்துரைக்கும் வகையிலும், பாடத் தேர்வு கணினி வழித் தேர்வாக கொள்குறி வகை வினா வடிவமைப்பிலும் நடத்தப்பப்படும். தேர்வுகளை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறும்.

    இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்

    தேர்வர்கள் தேர்வு எழுதும் நாள் அன்று ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையின் நகல் ஒன்றினை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு அறைக்கு கருமை நிற மையுடைய பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

    English Summary

    TNPSC released the notification for the Group 2 and Group 2A examinations on August 11. While 821 vacancies were initially announced, additional posts have since been included, bringing the total number of vacancies to be filled to 846. Candidates are actively applying for these positions. As today is the last day to apply, those who have not yet done so should submit their applications immediately.