TNPSC Group 4: குரூப் 4 தேர்வு.. நாளைதான் கடைசி நாள்.. இதுவரை எத்தனை லட்சம் பேர் விண்ணப்பிச்சிருக்காங்க

  • சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மொத்தம் 6,574 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த மாதம் ஆன்லைனில் விண்ணப்பபதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணியிடங்களுக்கு நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள்.

    Advertisement

    குரூப் 4 தேர்வில் சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என தேர்வர்கள் எதிர்பார்த்த நிலையில், 6,574 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. வரும் நாட்களில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4

    டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி குரூப் 4 தேர்வு வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி நடக்கிறது.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட மிக கடினமான கேள்வி.. பதில் என்ன தெரியுமா?
    Advertisement

    வழக்கமாக டிசம்பரில் குரூப் 4 தேர்வு டிசம்பரில் நடைபெறும் என்று இருந்த நிலையில் இந்த ஆண்டு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி என்பதால் ஏராளமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

    விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்

    இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடவும். நாளை கடைசி நாளில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றால் இணையதளம் முடங்கிவிட வாய்ப்பு உள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து விடவும்.

    Advertisement
    TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 2-வில் திணறடித்த கேள்விகள்! குரூப் 4க்கு எப்படி தயாராகணும்? நிபுணர்கள் விளக்கம்

    டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலேயே அதிகம் பேர் எழுதும் தேர்வாக குரூப் 4 தேர்வுதான் இருந்து வருகிறது. விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி தான். இருந்தாலும் பட்டப்படிப்பு, இன்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிப்பார்கள்.

    பணியிடங்கள் விவரம்:

    கிராம நிர்வாக அலுவலர் 291, இளநிலை உதவியாளர் - 3,798 , வரி வசூலிப்பவர் - 107, வரி தண்டலர் - 97, தட்டச்சர் -1,572, சுருக்கெழுத்து தட்டச்சர் -404, நேர்முக எழுத்தர் - 60, வனக்காவலர் 40 மற்றும் முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் போன்ற 46 பதவிகளில் மொத்தம் 6,574 காலி இடங்கள் நிரப்பப்படுகிறது.

    English Summary

    Group 4 Exam: A notification was released to fill a total of 6,574 vacancies through the TNPSC Group 4 examination. With the online application process having begun last month, 9.80 lakh candidates have applied so far. As tomorrow is the final day to submit applications for these posts, those who have not yet applied should do so immediately.