சென்னை: தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்கவுண்ட்ஸ் ஆபிசர், அசிஸ்டண்ட் என்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டில் உள்ள மிகவும் முக்கியமான துறைமுகங்களில் ஒன்று தூத்துக்குடியில் உள்ள வ உ சிதம்பரனார் துறைமுகம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த துறைமுகம் நாட்டின் மூன்றாவது பெரிய கண்டெயினர் முனையத்தை கொண்டுள்ளது.
இந்த துறைமுகத்தில் காலியாக உள்ள அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். அஸ்சிஸ்டண்ட் டிராபிக் மேனஜர் - 01 பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். அசிஸ்டண்ட் டிராபிக் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். ஷிப்பிங், சரக்கு செயல்பாடுகள், ரயில்வே போக்குவரத்து, வணிகம் உள்ளிட்ட துறைகளில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அல்லது இந்திய செலவு மற்றும் பணி கணக்காளர் நிறுவனம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னணி தொழில் நிறுவனத்திலோ அல்லது அரசு / பொதுத்துறை / தனியார் துறையிலோ ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி தெரிந்து இருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்த்ப்படுகிறார்கள். இந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். இதர பணியிடங்களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகளும் அளிக்கப்படும். அசிஸ்டண்ட் டிராபிக் மேனேஜர் (நிலை-I) - ரூ.50,000 - 1,60,000 வரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ. 475 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிவினருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 14.11.2026 அன்று கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பை பார்க்க: https://www.vocport.gov.in/பணியிடங்கள் விவரம்:
அக்கவுண்ட்ஸ் ஆபிசர் (நிலை-I) - 01
அக்கவுண்ட்ஸ் ஆபிசர் (நிலை-II) - 02
அசிஸ்டண்ட் என்ஜினியர் (மின்சாரம்) - 01
இந்தி மொழிபெயர்ப்பாளர் - 01கல்வித் தகுதி:
SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை.. 207 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
வயது வரம்பு:
மாதம் 85 ஆயிரம் சம்பளம்.. மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. டிகிரி போதும்!
சம்பளம் எவ்வளவு:
அக்கவுண்ட்ஸ் ஆபிசர் (நிலை-I) - ரூ.50,000 - 1,60,000
அக்கவுண்ட்ஸ் ஆபிசர் (நிலை-II) - ரூ.40,000 - 1,40,000
அசிஸ்டண்ட் என்ஜினியர் (மின்சாரம்) - ரூ.40,000 - 1,40,000
இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.45,800 - 1,21,300தேர்வு முறை;