பிஎஃப் நிறுவனத்தில் ஆணையர் பதவி.. டிகிரி முடித்தவர்களுக்கு லட்டு மாதிரி சான்ஸ்! 1.77 லட்சம் சம்பளம்

  • சென்னை: வருங்கால வைப்பு நிதி நிறுவனமான பிஎஃப் நிறுவனத்தில் ஆணையர் பதவிகளை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்கு வேலை தேடும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.77 லட்சம் சம்பளம் வழங்கப்படும். எதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து இருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்களை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய குடிமைப் பணிகள் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கான பணியிடங்களை யுபிஎஸ்சிதான் நிரப்பி வருகிறது. யுபிஎஸ்சி தற்போது பிஎஃப் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (பிஎஃப்) உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 80 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். நிறுவனச் சட்டம் / தொழிலாளர் சட்டங்கள் / பொது நிர்வாகத்தில் டிப்ளமோ முடித்து இருப்பவர்களுகு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது வரம்பு:

    11.09.2026 தேதிப்படி 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி / எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் என்றால் 40 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 38 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 45 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் என்றால் 48 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு?

    தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ. 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக்த்தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 25 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி , மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்க வரும் 11.09.2026 கடைசி நாளாகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-52-2026-Special-Engl-210826.pdf

    English Summary

    UPSC has issued a notification to fill the post of Commissioner at the Provident Fund (PF) organization. This is an excellent opportunity for young people seeking employment with the Central Government. Those selected for the position will receive a monthly salary of ₹1.77 lakh. Candidates holding a degree in any discipline are eligible to apply for these posts.