சென்னை: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 450 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிரக் இன்ஸ்பெக்டர், உதவி பொறியாளர், சட்ட அதிகாரி, அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அடுத்த மாதம் ஜூலை 17 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு, பி.இ./பி.டெக்., சட்டம், முதுகலை பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
யுபிஎஸ்சி எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மத்திய அரசில் காலியாகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் காலியாக உள்ள 450 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
* மருந்து ஆய்வாளர் (Drug Inspector) * மூத்த புகைப்பட அலுவலர் என மொத்தம் 54 வகையான பணியிடங்களில் 450 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பி இ/பிடெக், எல்.எல்.பி, பிடிஎஸ், பி.பார்ம், ஏதாவது ஒரு டிகிரி, மாஸ்டர் ஆஃப் லைப்ரரி சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 17.07.2026- தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 35 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பு மாறுபடும். சம்பளத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக ஷிப் சர்வேயர் பணிக்கு ரூ.78,800 - ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு , நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ 25 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17.07.2026 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை படிக்க: பணியிடங்கள் விவரம்
* உதவி பொறியாளர்
* சிறைத்துறை கண்காணிப்பாளர்
* அறிவியல் அலுவலர்
* கையிருப்பு அலுவலர்
* சட்ட அலுவலர்
* பொறியாளர் மற்றும் கப்பல் ஆய்வாளர்
* ராஜ்பாஷா அதிகாரி
* உதவி வேதியியலாளர்
* ஆலோசகர் (Consultant)
* உதவி நிர்வாக அலுவலர்
* நூலக மற்றும் தகவல் அலுவலர்
* துணை கண்காணிப்பு தொல்லியலாளர்
* நிறுவன வழக்குரைஞர்கல்வித் தகுதி:
வயது வரம்பு:
தேர்வு முறை:
https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-07-2026-Engl-250626.pdf