யுபிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. மத்திய அரசில் 546 பணியிடங்கள்! விண்ணப்பிக்க ரெடியா?

  • சென்னை: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 546 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 546 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சயின்டிபிக் ஆபீசர், மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டண்ட் பப்ளிக் ப்ராசிகியூட்டர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 3 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 546 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர், மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டண்ட் பப்ளிக் ப்ராசிகியூட்டர், சயின்டிஸ்ட் 'B' மற்றும் இதர பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை காணலாம்.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    * ஜூனியர் அறிவியல் அதிகாரி - 9
    * மண்டல இயக்குநர் - 2
    * செயல்பாட்டு அதிகாரி (டிஜிசிஏ) - 19
    * விமானப் பாதுகாப்பு அதிகாரி (Air Safety Officer) - 15
    * இணைப் பேராசிரியர், சிவில் பொறியியல் (போக்குவரத்து) - 1

    * உதவிப் பேராசிரியர், மின்சாரப் பொறியியல் (மின்சார இயந்திரங்கள்) - 1
    * உதவிப் பேராசிரியர், கணினிப் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு) - 1 பணியிடம்
    * உதவிப் பேராசிரியர், கணினிப் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு / கணினிப் * பொறியியல் / நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு) - 1 பணியிடம்
    என 95 வகையான பணியிடங்களில் மொத்தம் 546 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    Advertisement

    கல்வித் தகுதி:

    பி.இ/பிடெக், எல்.எல்.பி, எம்.ஏ, எம்.சி,ஏ, எம்பிபிஎஸ், பிஹெச்எம்.எஸ், முதுகலை பட்டம் அல்லது மருத்துவத் துறையில் டிப்ளமோ போன்ற கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

    அசிஸ்டண்ட் பப்ளிக் ப்ராசிகியூட்டர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு (LLB) முடித்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    பணியிடங்களைப் பொறுத்து அதிகபட்ச வயது வரம்பு மாறுபடுகிறது. சில பணிகளுக்கு அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

    Advertisement

    தேர்வு முறை:

    எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்னப்ப கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்க கடைசி நாள்:

    விண்ணப்பிக்க வரும் 03.07.2026 கடைசி நாளாகும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-06-2026-Engl-120626.pdf

    English Summary

    UPSC Job: UPSC has invited online applications for 546 vacancies across 95 categories, including Junior Scientific Officer, Medical Officer, Assistant Public Prosecutor and Scientist 'B'. Eligible candidates can apply through the official website before July 3, 2026.