ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.. கௌரவ விரிவுரையாளர்கள் பேட்டி

  • சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. தேர்வில் மூன்று முறை தோல்வி அடைந்தவர் எப்படி ஆணையராக முடியும்? என தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அருணகிரி பேட்டி அளித்துள்ளார். முந்தைய ஆட்சியில் (திமுக) உயர் கல்வித் துறையில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது என்றும், இதில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தியும் மற்றும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்பான சில கோரிக்கைகளை முன் வைத்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் இந்த சங்கத்தின் மாநில பொது செயலாளர் அருணகிரி பேசினார்,

    Advertisement

    அப்போது அவர் பேசுவையில், "கடந்த ஆட்சியில் (திமுக) உயர் கல்வித் துறையில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது இது தொடர்பாக தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் மற்றும் கௌரவ விரிவுரையர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதே இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் நோக்கம்.

    மேலும் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கு நடந்த தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகவும் அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    மேலும் தேர்வுக்கு முன்னும், தேர்வு நடைபெறும் போதும், தேர்வுக்கு பின்பும் குளறுபடிகள் நடந்ததாக கூறி அருணகிரி விளக்ககம் அளித்தார். அதன் பின்னர் கௌரவ விரிவு அவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கல்லூரி கல்வி ஆணையர் பதவியை கல்லூரி முதல்வர்களுக்கு வழங்கும் முறையினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டும் என அவர்கள் கோரிக்கைகள் வைத்தார்.

    தற்போது இருக்கக்கூடியவர் கல்லூரி கல்வி ஆணையர் 3 முறை தேர்வில் தோல்வியடைந்தவர், அவரை எப்படி நீங்கள் எங்களுடைய ஆணையராக போட முடியும்? என்றும் தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அருணகிரி கேள்வியையும் எழுப்பினார்.

    Topics: #trb #teachers

    English Summary

    "We have lost faith in the Teachers Recruitment Board. How can someone who failed the examination three times become a Commissioner?" stated Arunagiri, State General Secretary of the Tamil Nadu Government College Guest Lecturers Association, in an interview.