பணியில் சேரும்போதே ரூ.75,000 போனஸ் + மாத சம்பளம்.. BCA - B.sc படித்தோரை அழைக்கும் WIPRO

  • சென்னை: விப்ரோ ஐடி நிறுவனத்தில் இருந்து பிஎஸ்சி, பிசிஏ படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்ய ஜூலை 31 தேதி கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சேரும்போதே ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளதோடு தனியே சம்பளமும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியான விண்ணப்பம் செய்யலாம்.

    Advertisement

    விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) நிறுவனத்தில் இருந்து Wipro's Work Integrated Learning Program (WILP) 2024 & 2025 FY 26 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து 2024, 2025ம் ஆண்டில் கல்லூரியில் பிசிஏ அல்லது பிஎஸ்சி டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA உடன் முடித்திருக்க வேண்டும். இதில் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், புள்ளியில் (Statistics), எலக்ட்ரானிக்ஸ் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. மேலும் 10, பிளஸ் 2 மட்டும் தொலைதூர கல்வியில் படித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் கல்லூரி படிப்பை தொலைதூர கல்வியில் படித்து இருக்க கூடாது. விண்ணப்பத்தாரர்கள் பள்ளி படிப்பை இடைவெளியுடன் முடித்திருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி இருக்க கூடாது. ஆன்லைன் அசஸ்மென்ட்டின்போது ஒரு அரியர் இருக்கலாம்.

    Advertisement

    பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஜாயினிங் போனஸாக (Joining Bonus) ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக மாதந்தோறும் ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு மாதந்தோறும் ரூ.17,553, மூன்றாவது ஆண்டு மாதந்தோறும் ரூ.19,618, 4வது ஆண்டு மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும்.

    இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம்.

    Advertisement

    இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கஷன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    Wipro IT Jobs 2026 (விப்ரோ ஐடி வேலைவாய்ப்பு 2026): Wipro hiring for PWD work integrated learning program(WILP) 2024 and 2025 FY 2026. Application window will be end on July 31. Selected candidates will get Rs.75,000 joining bonus and get a monthly stipend.