சென்னை: "உங்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்" என்று கூறி, போர்ச்சுகலில் நடைபெறவுள்ள சர்வதேசக் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி நடிகரும் ரேஸருமான அஜித்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவைப் பகிர்ந்த பல இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள், அவருக்கு ஆதரவளிக்காமல் எதிர்மறையான மீம்ஸ்களைப் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள்.
கார் பந்தயமும் அஜித்தின் கோரிக்கையும்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான கார் பந்தயங்களிலும் தனது சொந்த அணியுடன் பங்கேற்று வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற 'சில்வர்ஸ்டோன்' கார் பந்தயத்திலும் அஜித்குமாரின் அணி பங்கேற்றது. அந்தப் போட்டியைத் தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று கொடியசைத்துத் தொடங்கி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அஜித்குமாரின் அணி அடுத்ததாகப் போர்ச்சுகலில் நடைபெறும் 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளது. அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டியில் தனது அணி பங்கேற்பது குறித்து வீடியோ மூலம் பேசிய அஜித்குமார், தங்களது அணிக்குத் தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அஜித் ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து சில மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. முதல்வர் விஜய்யுடன் அவர் பங்கேற்ற விழா வீடியோவிற்குப் பிறகே இதுபோன்ற விமர்சனங்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. மீம் 1: "என்னடா எவனுமே சப்போர்ட் பண்றேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாம இருக்கீங்க?... நீங்கதானே முதல்ல 'உன் குடும்பத்தைப் பார், நேரம் இருந்தா என் படத்தைப் பார்'னு சொன்னீங்க... அதான் எங்களுக்கு நேரம் இல்லை, நாங்க எங்க குடும்பத்தைப் பார்க்கப் போறோம்னு போயிட்டாங்கோ!" மீம் 2: "வேலைக்குப் போறவங்க வேலைக்குப் போகணும் தல... படிக்கிறவங்க நல்லா படிக்கணும் தல... நாடு விட்டு நாடு வந்தது உழைச்சு வீட்டிற்குப் பணம் அனுப்பத்தானே தவிர, கார் ரேஸ் பார்ப்பதற்கு இல்லை!" மீம் 3: "நடிச்சது பாதி மொக்கப் படம்; சரி, முதுகுல குத்து வாங்கியிருக்காருன்னு கைக்காசைப் போட்டுப் படம் பார்க்க வந்தா, 'போயிக் குடும்பத்தைப் பாருங்க'ங்கிற... சரி, குடும்பத்தைப் பார்க்கலாம்னு போனா, 'வந்து ரேஸைப் பாருங்க'ங்கிற... சரி, ரேஸைப் பார்த்தா, அதையாச்சும் ஒழுங்கா பண்றியா? முழுசா ஓட்டி முடிக்கிறதுக்குள்ள 30 தடவை எங்கயாச்சும் முட்டிட்டு நிக்கிற! செல்ஃபி எடுக்க வர்றவனைத் திட்டுற; கேப்ல காசு வேணும்ங்கிறதுக்காக 'காம்பா' குடிக்கிற... அப்புறம் ஓரமா நிக்கிறவன் கிட்டயே போயி 'ஓரமா நில்லுங்க'ங்கிற!" இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "எங்கள் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கின்றன! டெல்லி எல்லையில் 720 விவசாயிகள் இறந்துபோனார்கள்; இந்தியா முழுவதும் கொரோனா காலத்தில் கொத்துக் கொத்தாக உயிர்கள் போயின; இன்றைக்கும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவை எதைப் பற்றியாவது உங்களுக்குக் கவலை இருந்ததுண்டா? ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனைக்காகவாவது நீங்கள் குரல் கொடுத்திருப்பீர்களா? அப்படி இருக்கும்போது, இன்றைக்கு உங்களுக்கு எதற்காக மக்கள் ஆதரவு தர வேண்டும்? நீங்கள் வாழுங்கள்... மக்களை வாழ விடுங்கள்!" - என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த குழப்பம்.. கோவை அரசு பேருந்து நடத்துநர் தந்த விளக்கம்!
ரசிகர்களின் மீம்ஸ்களும் விமர்சனங்களும்
மூத்த பத்திரிகையாளரின் சாடல்:
வங்கி டெபாசிட், செல்வ மகள் சேமிப்பு, பொன்மகன் சேமிப்பு, பிஎப் சேமிப்பு உள்ளவர்களுக்கு குட்நியூஸ்