பாரபட்சமே இல்லாமல் பங்கம் செய்யப்படும் ஜூனியர் என்டிஆர்.. அப்படி என்ன தான் பிரச்சனை


  • சென்னை: ஆனந்தம் படத்தில் ஸ்ரீவித்யா, தனது மூத்த மகனாக நடித்த மம்முட்டியை பார்த்து அப்படி என்னதான் பிரச்சனை சொல்லித் தொலையேண்டா.. மொத்தமாக போட்டு உடைச்சிடுடா என்று கூறுவார். அதற்கு மம்முட்டி, என்னன்னு சொன்ன தாங்க மாட்டீங்க. மனசுக்குள்ளே போட்டு அழுதுக்கிட்டு இருக்கேன் என்பார். இந்த மீம்ஸ் மிகவும் புகழ் பெற்றது.. அந்த மீம்ஸ் வடிவிலேயே இன்று சமூக வலைதளங்களில் நடப்பதை எல்லாம் பார்த்தால் கேட்க தோன்றும்.. ஏனெனில் சமூக வலைதளங்களில் பாரபட்சமே இலலாமல் பங்கம் செய்யப்படுகிறார் தெலுங்கின் புகழ் பெற்ற நடிகர் ஜூனியர் என்டிஆர்.. திடீரென மொத்தமாக சேர்ந்து எல்லாரும் ஜூனியர் என்டிஆரை அடிக்கிறார்கள்.

    Advertisement

    சமூக வலைதளங்கள் எல்லாமே சற்றே விசித்திரமானவை.. என்ன ஒன்று.. நம்மூரில் பெண்கள் கிராமங்களில் புரணி பேசுவார்களே.. அதையே நவீனமாக செய்கின்றன. ஏஐ அல்காரிதமும்.. ஒருவர் புரணி பேசுவது பேசுபொருளானால், இவன் தான் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. இவனை விடக்கூடாது என்று, இந்த வாரம் இவனை வைத்தே ஓட்டுவோம் என்று அல்காரிதம் மாறுகிறது. உடனே எல்லாருமே ஒரே நபரை அல்லது ஒரே விஷயத்தை பற்றி சட்டென பேச தொடங்குவார்கள். அதனையே ஷேர் செய்ய தொடங்குவார்கள்.

    Advertisement

    அப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டட் வெறியில் இருக்கும் ஏஐ அல்காரிதங்களில் சிக்கும் பிரபலங்களை, நம் மக்கள் பாரபட்சமே இல்லாமல் அடித்து வெளுக்கிறார்கள். போனவாரம் வரை ஒருவரை அடிப்பார்கள். அடுத்த வாரம் வேறு ஒருவரை அடிப்பார்கள். இவர்கள் வாயில் அவில் போல் சிக்கும் அந்த பிரபலம் அல்லது நடிகர், நடிகையின் நிலை மோசமானது. அப்படி அண்மையில் மோசமாக அடி வாங்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசியல், சினிமா, விளையாட்டு என அவரவருக்கு பிடித்த டாப்பிக்கை தான் ஏஐ டைம் லைனில் காட்டும். அவர்கள் அடிக்க தொடங்குவார்கள்

    Advertisement
    வேலூரில் கிலோ கணக்கில் தங்க நகையுடன் நடனமாடிய வேல்முருகன் யார் தெரியுமா? சொத்து மதிப்பு தெரியுமா?

    அந்த வகையில் சினிமா டிரெண்டிங்கில் கடந்த மாதம் முழுக்க பவன் கல்யாணை போட்டு அடித்தார்கள். விஜய் சிஎம் ஆகிவிட்டார். நீ ஒரு சீட்டு தான் வாங்கினாய் என்று ஆந்திராவில் பங்கமாக கிண்டல் செய்ய தொடங்கினார்கள். பதிலுக்கு பவன் கல்யாண் ரசிகர்கள் விஜய்யை திட்டி வந்தார்கள். அடுத்தாக பவன் கல்யாணை விட்டுவிட்டு, பெத்தி படம் காரணமாக ராம் சரணை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். கிரிக்கெட் இங்கிலாந்தில் பிறந்தது. ஆந்திராவில் மறைந்தது என்று அவரது ஆட்டத்தை கிண்டல் செய்து பதிவிட்டு வந்தார்கள். அடுத்தாக ராம் சரணிண் சில படங்களை போட்டும் அடித்து வந்தார்கள்..

    Advertisement

    இடையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. திடீரென விஜய் ரசிகர்கள் சிலர், மீண்டும் பவன் கல்யாணை போட்டு அடிக்க தொடங்கினார்கள். அவர் பேண்டிடை கழட்டிவிட்டு ஸ்டைலாக மீரா ஜாஸ்மின் பாட்டுக்கு ஆடியைதை போட்டு அடித்தார்கள். அப்போது பதில் தரும் போது, யாரே ஒரு நெட்டிசன், ஜூனியர் என்டிஆரின் பழைய படத்தின் ரியாக்சன் வீடியோவை பதிவிட்டார். அது பலருக்கும் பிடித்து போகவே.. பாரபட்சமே இல்லாமல் ஜூனியர் என்டிஆரின் நடனம், ரியாக்சன், கோபம், சிரிப்பு என அவரை கோமாளி போல சித்தரித்து பதிவிட தொடங்கினார்கள். பலரது டைம் லைன் முழுக்க ஜூனியர் என்டிஆரின் பழைய வீடியோக்கள் தான் வருகின்றன. மீம்ஸ் மற்றும் கிண்டல் செய்து பதிவிடுகிறார்கள். வடிவேலு பிரபுதேவா ஒரு படத்தில் பேசும் போது, ஓய் பிளட், சேம் பிளட் என்பார்... பாரபட்சமே இல்லாமல்.. அதே கெட்ட வார்த்தை.. என்று கூறுவார்.

    Advertisement
    இன்பன் உதயநிதி பட்டம் பெற்ற இங்கிலாந்து கல்லூரி எதற்கு பேமஸ்.. படிக்க எவ்வளவு செலவாகும்?

    அப்படித்தான் இப்போது ஜூனியர் என்டிஆரை கலாய்த்து வருகிறார்கள். இந்த கிண்டல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. வைரல் ஆக தொடங்கியதால், ஆந்திர மக்களின் டைம் லைன் பக்கமும் போய்விட்டது. என்னடா எங்க தலைவரை இப்படி அடிக்கிறீங்க என்று அவர்களும் பதிலடி கொடுக்க தொடங்கிவிட்டார்கள்..ஆனால் எப்படி திடீரென தெலுங்கின் புகழ் பெற்ற நடிகர் ஜூனியர் என்டிஆரை பங்கம் செய்கிறார்கள்.

    எல்லாருக்கும் அப்படி என்ன கோபம் அவர் மீது என்று ஆனந்தம் படத்தில் வரும் ஸ்ரீதேவி மாறி நாமும் தான் கேட்கிறோம்.. ஆனால் அவர்களோ... சொல்ல மாட்டேன்.. சொன்னால் தாங்க மாட்டீங்க என்பது போல நடந்து கொள்கிறார்கள். ஒன்று மட்டும் உண்மை.. சமூக வலைதளங்களில் யாரை வேண்டுமானாலும் குறிவைத்து அடிக்க முடியும்..பாவம் அடிவாங்காமல் இருக்க வேண்டுமானால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. பழைய காலம் போல் புரணி பேசுவதின் நவீன வடிவம் தான் இந்த சமூக வலைதளங்கள்..

    English Summary

    Jr. NTR mercilessly trolled on social media: Why is everyone suddenly mocking him in unison?