அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும் மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்!

  • சென்னை: கேள்வி கேட்டால் மட்டும் உங்கள் வீட்டிற்கு மின்சாரம் வந்துவிடுமா என்று நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையாகி இருக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் திமுக, அதிமுக, நாதக, பாஜக உள்ளிட்ட அத்தனை தரப்பும் மீம்ஸை உருவாக்கி வெளுத்து வாங்கி வருகின்றார். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    பரிதாபங்கள் வீடியோ ஒன்றில் கோபி, சுதாகரிடம், "அதெப்படிடா ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" என்று கேட்பார். அதற்கு சுதாகர், "இந்தா இவனைப் பாரேன்" என்பார். அதில் சுதாகர் இடத்தில் சர்ஸ் சாகா, "இந்தா இந்த மாஸ்டர் மகேந்திரனை பாரேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கேள்வியெல்லாம் கேட்காதீங்கடா.. போட்டு பொளங்கடா அவனை ரகம்.

    Advertisement

    மாஸ்டர் மகேந்திரன் தனக்கு சோலார் சிஸ்டமில் இருந்து மின்சாரம் எடுக்க தெரியும் என்று பேசி இருந்தார். அதற்கு திமுக ஆதடவாளர் ஒருவர், "தம்பி மகேந்திரன்.. சோலார் சிஸ்டம் என்றால் சூரியக் குடும்பம்.. உங்கள் வீட்ல இருந்து கரண்ட் எடுத்துக்க சொல்றீங்க வேற.. பயங்கரம் பா" என்று கமெண்ட் அடித்துள்ளார். அதாவது மகேந்திரன் ஒரு பிளானட்டா என்று கேட்டிருப்பது மாட்டினியாடா பம்பரக்கட்ட மண்டையா ரகம்.

    அதேபோல் மாஸ்டர் மகேந்திரனை க்ளோனாக மாற்றி, மின்சார ஐடியாவையே அப்படியே சாப்பாட்டிற்கும் மாற்றியுள்ளார். அதில், சிலிண்டர் இல்லைனு ஏன் புலம்புறீங்க.. விறகு அடுப்பு எதுக்கு இருக்கு.. தெரியாம கேட்குறேன்.. ஒரு 6 மாசம் உங்களால சாப்பிடாம இருக்க முடியாதா என்று மகேந்திரன் கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் ரகம்.

    Advertisement

    போக்கிரி படத்தில் விஜய் ஒரு மருத்துவரை கத்தியால் கிழித்துவிட்டு, வா.. நீ என்மேல புகார் கொடு.. நான் அவன்மேல புகார் கொடுக்குறேன் என்று அழைப்பார். அதில் வரும் மருத்துவராக மகேந்திரனை மாற்றி, "வா வந்து சோலார் சிஸ்டம்ல இருந்து கரண்ட் எடுத்து எல்லோர் வீட்டுக்கும் கொடு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் 6 கோடி வீட்டுக்கும் மின்சாரம் கொடுக்க முடியுமாப்பா ரகம்.

    ஆரோக்கியா பால் விளம்பரத்தில் இயற்கையான சூழல், கைநிறைய சம்பளம், இதற்கு மேல என்னங்க வேண்டும் என்று ஒரு பெண் பேசுவார்.. அந்தப் பெண்ணை தவெக நிர்வாகியாக மாற்றி, "ஒரு சோலார் சிஸ்டம்.. ரெண்டு வயர் ஒரு மோட்டார்.. இதுக்கு மேல காத்துக்கு என்னங்க வேணும்" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after Actor Master Mahendran power cut interview controversy