காய்ச்சல்னு சொல்லி சட்டசபைக்கு லீவ் போட முடியுமா.. சோகத்தில் விஜய்.. தெறிக்கவிடும் அரசியல் மீம்ஸ்!

  • சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்ச்சிகள், வைகோவின் பேச்சில் நடந்த மாற்றம், சட்டசபை நேரலை துண்டிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனிடம் அடி வாங்கிவிட்டு சமுத்திரகனி செல்ஃபோனில், "போட்ட போடுல காசை கொடுத்துட்டாங்கள்ல.. நம்ம பயலுகலாம் பாஞ்சு பாஞ்சு அடிச்சாங்க" என்று காயத்துடன் நடந்து செல்வார். அதில் வரும் சமுத்திரகனி மற்றும் அடியாட்களாக தவெகவினரை மாற்றி, கொளத்தூர் மேட்டரை இழுத்த உடன் திமுக அழுக ஆரம்பிச்சுட்டாங்கள்ல என்று பேசி செல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உங்களை திருத்த முடியாதுடா.. திருத்தவே முடியாது ரகம்.

    Advertisement

    சிவாஜி படத்தில் ரஜினி, சிவாஜியும் நான்தான்.. எம்ஜிஆரும் நான்தான் என்பார். அதில் வரும் ரஜினியை வைகோவாக மாற்றி, தவெகவுக்கு யாரும் ஆதரிக்க கூடாதுனு முதல்ல பேட்டி கொடுத்ததும் நான்தான்.. இப்ப தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே பாராட்டாத போது திமுக கூட்டணியில் இருந்து முதல்ல பாராட்டு பத்திரம் வாசிக்கிறதும் நான்தான்.. என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கப்பா ரகம்.

    ஒரு படத்தில் பேருந்தில் கவுண்டமணியிடம் தனக்கு வாய் பேச வராது என்று சொல்லி செந்தில் ஒரு கடிதம் கொடுத்து பிச்சை எடுப்பார். அதில் வரும் செந்திலாக விஜய்யை மாற்றி, இன்னைக்கு சட்டசபைல விஜய் மாஸ் பண்ணிட்டாரு என்று கடிதத்தில் எழுதி இருப்பதாகவும், அதற்கு தமிழக மக்கள், எப்போ என்று கேட்க, உடனடியாக நேரலை கட் பண்ணதுக்கு அப்றோம் என்று பதில் உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்களை பார்த்தால் எப்படி தெரியுது ரகம்.

    Advertisement

    திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் மயில்சாமியை பிடிக்கும் கருணாஸ், வந்ததில் இருந்து வேணுகோபால் ஃபிரம் டைடல் பார்க்னு சொன்னயே.. அப்படினா என்ன என்பார்.. டைட்டாகி பார்கில் தூங்கிடுவேன் என்பார். அப்போ அது கம்ப்யூட்டர் கம்பெனி இல்லையா என்று அடிப்பார். அதில் வரும் மயில்சாமியாக புஸ்ஸி ஆனந்தை மாற்றி, நீதானே நீர் வளத்துறை அமைச்சர்.. சட்டசபைல மேகதாது விவகாரம் பற்றி ஏதாவது பேசுனியா என்று கருணாஸ் கேட்க, அதற்கு புஸ்ஸி ஆனந்த், எது மேங்கோ பிஸ்கட்டா என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இதுதான்டா மாற்றம் ரகம்.

    Advertisement

    உத்தமபுத்திரன் படத்தில் தனுஷ் பொய் சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்து விவேக் மிரண்டு போவார். அப்போது சபரிங் ஃப்ரம் பீவர்னு லீவ் போட முடியுமா என்று கேட்பார். அதில் வரும் விவேக்காக விஜய்யை மாற்றி, சபரிங் ஃப்ரம் ஃபீவர்னு சட்டசபைக்கு லீவு போட முடியுமா கைஸ் என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after CM Vijay didn't even answer for law and order problem in the Tamilnadu Assembly