எவ்வளவு தைரியம் இருந்தா 175 ரன்கள் போதும்னு சொல்லுவ பிளமிங்கை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்!

  • சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி கொடூரமான தோல்வியை அடைந்துள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    திமிரு படத்தில் சிங்கமுத்து குடிக்கும் கூல்டிரிங்ஸை தன்னுடையது என்று நினைத்து வடிவேலு வார்த்தையைவிட்டு அடிவாங்குவார். அதில் வரும் வடிவேலுவாக ஸ்டீபன் ஃபிளமிங்கையும், சிங்கமுத்துவாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "டேய் இவன் பாவம்டா.. இவனை விடாதீங்கடா.. எவ்வளவு தைரியம் இருந்தா 175 ரன்களை வின்னிங் ஸ்கோர்னு சொல்லுவ" என்று அடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

    Advertisement

    யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிடம் ரகுவரன், "வேலை கிடைக்கலைனா விடு.. நீ இவ்வளவு தூரம் வந்ததே பெருசு.. அடுத்த இண்டர்வியூல பார்த்துக்கலாம்" என்பார். அதில் வரும் தனுஷாக சிஎஸ்கே அணியையும், ரகுவரனாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "சரி விடு.. இவ்வளவு காயம் அடைந்த வீரர்களை வச்சிக்கிட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு.. அடுத்த சீசன்ல பார்த்துக்கலாம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆறுதல்.

    சத்ரபதி படத்தில் வடிவேலு மஃப்டியில் சென்று போலீஸிடமே அடி வாங்கிவிட்டு, போதும்யா போதும்.. விருது வாங்கணும்னு வேலை செஞ்சதும் போதும்.. உங்கக்கிட்ட அடி வாங்கினதும் போதும் என்பார். அதில் வரும் வடிவேலுவாக சிஎஸ்கே ரசிகர்களை மாற்றி, "போதும்யா.. நீங்க பிளே ஆஃப்ஸ் போனதும் போதும்.. எங்களுக்கு ஹோப் கொடுத்ததும் போதும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள அடிவாங்கினது நானு ரகம்.

    Advertisement

    சென்னை 28 பார்ட் 2வில் மிர்ச்சி சிவாவிடம் அரவிந்த் ஆகாஷ், டேய்.. என்னடா பண்ற என்பார். அதற்கு மிர்ச்சி சிவா, "மச்சா.. ஏபி டிவில்லியர்ஸ் ஷாட் ட்ரை பன்றேன்டா" என்பார். அதில் வரும் மிர்ச்சி சிவாவாக ருதுராஜ் கெய்க்வாட்டையும், அரவிந்த் ஆகாஷாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, என்னடா பண்ற என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கொடுமையிலும் கொடுமை ரகம்.

    பூஜை படத்தில் மணமகள் அறைக்கு சென்ற விஷாலை அவரின் தாய் ராதிகா, எதுக்கு வந்த.. எதுக்கு வந்த என்று கேட்டு அடித்துவிடுவார். அதில் வரும் ராதிகாவாக சிஎஸ்கே ரசிகர்களையும், விஷாலாக ருதுராஜ் கெய்க்வாட்டையும் மாற்றி, "எதுக்குடா டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்த.. எதுக்கு பேட்டிங் எடுத்த" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அவனை விடாதீங்கடா ரகம்.

    Advertisement

    English Summary

    memes: Fantastic memes from social media after CSK lost by 5 wickets against SRH at Chepauk in IPL 2026