கெத்துடா சிஎஸ்கே.. எங்களின் தோல்வியையே இப்படி கொண்டாடுறீங்க.. மிரட்டும் மீம்ஸ்!

  • மும்பை: ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில், சோசியல் மீடியாவில் சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கியுள்ள ஜாலியான மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    மாஸ்டர் படத்தில் ரமேஷ் திலக்கை போட்டு விஜய் வெளுக்கும் போது, "சார்.. சாமி சார்.. அடிக்க கூடாது" என்பார். அதற்கு விஜய், "அது கஞ்சா விற்கும் போது தெரியலையாடா" என்று பதில் அளிப்பார். இதில் வரும் ரமேஷ் திலக்காக ஆர்சிபி ரசிகரையும், விஜய்யாக சிஎஸ்கே ரசிகரையும் மாற்றி, " எலிமினேட் ஆகிட்டு இது வரைக்கும் வந்ததே பெருசுனு சொல்லி முட்டு கொடுத்துக்கிட்டு இருக்கானுங்க கிகிகி" என்று சொல்வதாகவும், அதற்கு சிஎஸ்கே ரசிகர், "ஏன் இத்தனை வருஷமா பாட்டிலிங் பண்ணிட்டு இதயத்தை வென்றோம்.. கிட்னி, லிவர், சட்னினு சொல்லும் போது தெரியலையாடா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சித்தப்பு சிக்கிட்டாரு ரகம்.

    Advertisement

    லப்பர்பந்து படத்தில் கடைசி பந்தில் தினேஷ் விக்கெட்டை கைப்பற்றிய பின் எதிரணி வீரர்கள் கொண்டாடி தள்ளுவார்கள். அதனால் உற்சாகம் அடையும் தினேஷ், மீசையை முறுக்கி கொண்டு நடந்து வருவார்.. அதில் வரும் தினேஷாக சிஎஸ்கே அணியையும், எதிரணி வீரர்களாக மற்ற ஐபிஎல் அணிகளையும் மாற்றி, நமது வெற்றியை விட தோல்வி அதிகமாக கொண்டாடப்படுகிறது.. இந்த லீக்கை யார் ஆண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ரகம்.

    சிங்கமுத்துவிடம் ஆட்டோவில் பங்கு கேட்கும் வடிவேலுவை, மாங்கு மாங்குகென்று குத்துவார். அதில் இருந்து எஸ்கேப்பாகும் வடிவேலு, யாரை குத்திக் கொண்டு இருக்கான் என்று கேட்பார். அதில் வரும் சிங்கமுத்துவாக சிவம் துபேவையும், வடிவேலுவாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "சீசனே முடிஞ்சு போச்சு.. இப்போ வந்து இந்த குத்து குத்திட்டு இருக்கானே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பாவம் யார் பெற்ற பிள்ளையோ ரகம்.

    Advertisement

    வடசென்னை படத்தில் செந்தில் கையில் அடிபட்டதால், வாக் அவுட் கொடுத்துவிடுவார். அதனை வந்து தனுஷிடம் அவரின் ஆள் கூறுவார். அந்த நபராக ருதுராஜ் கெய்க்வாட்டை மாற்றி, "ஐயா நாங்க 2027ல் கம்பேக் கொடுத்துக்கிறோம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகனின் மைண்ட் செட்.

    தமிழ்ப் படம் முதல் பாகத்தில் நம்மளை மாதிரி ஏழை வீட்டில் அந்தப் பெண் வந்து எப்படி தங்கும்னு கஷ்டமா இருக்கு பாட்டி என்று சிவா கூறுவார். அதில் வரும் சிவாவாக சிஎஸ்கே ரசிகர்களை மாற்றி, 3 வருஷமா கப் அடிக்காம இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு பாட்டி என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி ரகம்.

    Advertisement

    English Summary

    memes: Fantastic memes from social media after CSK lost the chances to qualify for the IPL Playsoffs in this season