நான் பொடியன் இல்ல.. என்னோட பேரு வைபவ் சூர்யவன்ஷி தெறிக்கும் ராஜஸ்தான் மீம்ஸ்!

  • மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடந்த சம்பவங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    கேஜிஎஃப் முதல் பாகத்தில் காவல் ஆய்வாளரின் தலையில் பாட்டிலை கொண்டு அடித்துவிட்டு, "என் பெயர் ராக்கி" என்பார் ஒரு பொடியன். அதில் வரும் பொடியனாக வைபவ் சூர்யவன்ஷியை மாற்றி, "நாக் அவுட் மேட்ச்ல 97 ரன்களும், 96 ரன்களும் அடிக்கிற.. நீயெல்லாம் மனுஷனே இல்லடா டேய்" என்று சொல்வதாகவும், அதற்கு, "என் பெயர் பொடியன் இல்ல.. என்னோட பேரு வைபவ் சூர்யவன்ஷி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

    Advertisement

    இனிமே இப்படிதான் படத்தில் சந்தானத்திடம் கூல் சுரேஷ், "என்ன பாஸ்.. நிஜமாலுமே பேசப் போறீங்க" என்பார். அதில் வரும் சந்தானமாக சுப்மன் கில்லையும், கூல் சுரேஷாக ரசிகர்களையும் மாற்றி, "என்ன பாஸ்.. பிக் மேட்ச்ல பெர்ஃபார்ம் பண்றீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

    அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் சிறுமி ஒருவர், "விஜய் படமே போட மாட்றாங்க.. விஜய் படம் போட்டா தான் என்னாவாம்" என்று கேட்வார். அவரை வைபவ் சூர்யவன்ஷியின் ரசிகராக மாற்றி, "சென்சுரியே அடிக்க மாட்றான்.. அவுட் ஆகிட்டே இருக்கான்.. அவரை சென்சுரி அடிக்கவிட்டாதான் என்னவாம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் க்யூட் ரகம்.

    Advertisement

    கருப்பு படத்தில் மினிஸ்டர் மற்றும் நீதிபதியை மாட்டிவிட்டு வெளியில் வரும் ஆர்ஜே பாலாஜியை, மேரா பாய் என்று சூர்யா வரவேற்பார். அதில் வரும் ஆர்ஜே பாலாஜியாக சுப்ம கில்லையும், சூர்யாவாக டோனவன் ஃபெரைராவையும் மாற்றி, மேரா பாய் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கருப்பன் வரான் வழி மறிக்காதே ரகம்.

    பட்டத்துயானை படத்தில் சந்தானம் விஷாலிடம், "எதுக்குடா பக்கெட்ல தண்ணீர்" என்று கேட்பார். அதில் வரும் சந்தானமாக ரசிகர்களையும், விஷாலாக சுப்மன் கில்லையும் மாற்றி, "எதுக்குடா டீம்ல சாய் கிஷோர்.. பவுலிங் ஏன்டா கொடுக்கலை" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

    Advertisement

    English Summary

    memes: Fantastic memes from social media after Gujarat won by 7 wickets against Rajasthan in the Qualifier 2 of IPL Playoffs