மெஸ்ஸியால தப்பிச்சிட்டோம்.. நம்ம 76 ஆல் அவுட்டை எல்லாரும் மறந்துட்டாங்க.. கம்பீரை பொளக்கும் மீம்ஸ்!

  • சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்துள்ளது. இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு மோசமான தோல்வியை இந்திய அணி அடைந்ததே கிடையாது. இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    பரிதாபங்கள் வீடியோ ஒன்றில் சுதாகரை லாக் செய்து கோபி, நான் அங்கிட்டு போனேன்.. உடனே என்னுடைய ரகசியத்தை சொல்லி முதுகுல குத்திட்டல்ல.. என்று அடிப்பார். அதில் வரும் கோபியாக சஞ்சு சாம்சனையும், சுதாகராக கவுதம் கம்பீரையும் மாற்றி, "முதுகுல குத்திட்டல்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எல்லாம் என் நேரம்டா ரகம்.

    Advertisement

    புதுப்பேட்டை படத்தில் தனுஷின் அப்பாவை பார்த்து ஒரு ரவுடி, ஸ்ஸஸப்பா.. கூட்னு போங்கடா இவன.. எடுத்து சொறுகிற போறேன் என்பார். இந்திய அணியின் படுதோல்வியை பார்த்த ரசிகர் ஒருவர், தனுஷின் அப்பாவாக கம்பீரை மாற்றி, டேய் பிசிசிஐ.. இவன ஒழுங்க கூட்னு போங்கடா.. என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இந்திய ரசிகர்களின் மனக்குமுறல்.

    கில்லி படத்தில் விஜய் - த்ரிஷா எஸ்கேப் ஆன பின் தனது அடியாளிடம் பிரகாஷ்ராஜ், போய்ட்டானா.. போய்ட்டானா ஓடிட்டானு அர்த்தம்.. போய் பிடிடா என்று அடிப்பார். அதில் வரும் பிரகாஷ்ராஜாக கம்பீரை மாற்றி, 125 ரன்களில் தோத்துருக்கோம்.. 1, 2, 5 இதனை கூட்டினா 7 வருதானு பாரு.. என்று சொல்வதாகவும், அடியாள் எதுக்குனே என்று கேட்பதாகவும், பழியை தூக்கி தல மேல போடுறதுக்கு என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடங்கொய்யால ரகம்.

    Advertisement

    கலகலப்பு படத்தில் மனோபாலா, நல்ல வேளை.. இவங்க கலவரத்துல நம்ம பொண்ணு தூக்குனதை மறந்துட்டாங்க என்பார். அதில் வரும் ஸ்ரேயாஸ் ஐயராக மனோபாலாவை மாற்றி, நல்ல வேளை.. அர்ஜெண்டினா வின் பண்ணதால நம்ம 76 ரன்களுக்கு அவுட் ஆனதை எல்லாரும் மறந்துட்டானுங்க என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டடா பம்பரக்கட்ட மண்டையா ரகம்.

    புதுக்கோட்டை படத்தில் சினேகாவை தனுஷை பார்த்து, அழுகையா வருது என்று அழுவார். நேற்றைய ஆட்டத்தில் மைதானத்தில் இருந்த இந்திய அணி ரசிகர்கள் 8 ஓவர்களிலேயே புறப்பட தொடங்கிவிட்டனர். இதனை பார்க்கும் போது அழுகையாக வருவதாக கூறி உருவாக்கப்பட்டுள்ள மீம் பயிற்சியாளரை வேகமா மாத்தனும் ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after India all out for just 76 runs against England at Trent Bridge