வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்!

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பனையூர் அலுவலகம் வந்து தவெகவில் இணைந்துள்ளார். ஒரு காலத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்திக்க விஜய் காத்திருந்த சூழலில், இன்று விஜய்யின் ஒப்புதலோடு கடம்பூர் ராஜூ தவெகவில் இணைந்திருக்கிறார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் அக்கட்சியினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்சி சம்பத், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சுந்தரராஜ், வீரபாண்டி, ராஜமுத்து, மான்ராஜ், சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டோர் தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். தென் மாவட்டங்களில் அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பே இதன் மூலமாக ஆட்டம் கண்டுள்ளது.

    Advertisement

    இதில் தவெகவில் இணைந்த பின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், தவெகவில் இணைய தாயுள்ளத்தோடு ஒப்புதல் கொடுத்தவர் விஜய் என்று பேசி இருக்கிறார். இது தவெக தொண்டர்கள் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது. ஏனென்றால் அதிமுக ஆட்சியின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜூ.

    விஜய் படத்திற்கு ஒவ்வொரு முறை சிக்கல் வரும் போதும் விஜய் கடம்பூர் ராஜூவை சென்று சந்தித்து கோரிக்கை வைப்பார். அதில் ஒரு ஷோபாவில் கடம்பூர் ராஜூ உட்கார்ந்திருப்பது போலும், விஜய் ஓரமாக இருக்கும் ஷோபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனை தோண்டி எடுத்துள்ள தவெக தொண்டர்கள் ஒரு மீம்ஸை உருவாக்கியுள்ளனர்.

    Advertisement

    விஜய் நடித்த திருமலை படத்தில், வாழ்க்கை ஒரு வட்டம்.. இங்க தோற்கிறவன் ஜெய்ப்பான்.. ஜெய்க்கிறவன் தோற்பான் என்று பேசி இருப்பார். அதுபோல் ஒரு காலத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்திக்க விஜய் காத்திருந்த காலம் மாறி, தற்போது விஜய் கட்சியில் கடம்பூர் ராஜூ வந்து சேரும் சூழல் உருவாகி இருப்பதாக மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவெகவினர் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது.

    English Summary

    memes: Fantastic memes from social media after Kadambur Raju joined in Vijay's TVK at tha panaiyur office