தம்பி கொஞ்சம் பவுலர்ஸ்க்கு மரியாதை கொடுப்பா வைபவ் சூர்யவன்ஷியால் கதறும் சிஎஸ்கே.. தரமான மீம்ஸ்!

  • சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்திருக்கிறது. சூர்யவன்ஷியின் அதிரடி மற்றும் சிஎஸ்கே அணி ரசிகர்களின் புலம்பலை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    பரிதாபங்கள் வீடியோவில் சுதாகர், "நல்லா இருக்க மாட்டீங்கடா நீங்க எல்லாம்.. சத்தியமா நல்லாவே இருக்க மாட்டிங்க" என்பார். அதில் வரும் கோபியாக லக்னோ அணியையும், சிஎஸ்கே அணியாக சுதாகரையும் மாற்றி "நல்ல இருக்க மாட்டீங்கடா நீங்க எல்லாம்.. சத்தியமா நல்லாவே இருக்க மாட்டிங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகர்களின் மனசாட்சி.

    Advertisement

    வல்லவன் படத்தில் ரீமா சென்னுடன் பிரேக் அப் செய்யும் சிம்பு, "இப்போ கால்ல தூக்குடி.. தூக்குடி" என்று மிரட்டுவார். அதில் வரும் சிம்புவாக சூர்யவன்ஷியையும், ரீமா சென்னாக ஆகாஷ் சிங்கையும் மாற்றி, "ஏதோ சிஎஸ்கே கூட விக்கெட் வீழ்த்திட்டு பேப்பரை தூக்கி காட்டுனியாமே.. இப்போ தூக்குடா.. தூக்குடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

    கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் சந்தானம் கணேஷை, "எங்ககிட்ட சொன்ன மேட்டரை அப்படியே டயலாக் மாறாம அவன்கிட்ட போய் சொல்லிட்டல" என்று அடிப்பார். அதில் வரும் சந்தானமாக சிஎஸ்கே அணியையும், கணேஷாக லக்னோ அணியையும் மாற்றி, "எங்ககிட்ட வாங்கின 2 பாய்ண்ட்டை அப்படியே எடுத்து போய் ராஜஸ்தான் அணி கிட்ட கொடுத்திருக்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஏன்டா இப்படி பண்ண ரகம்.

    Advertisement

    எதிர்நீச்சல் படத்தில் பள்ளிச் சிறுவனிடம் சிவகார்த்திகேயன், "தம்பி.. படிக்கிறதுக்கு பேக் ரொம்ப அவசியம்" என்று சொல்வார். அதில் வரும் சிவகார்த்திகேயனாக ரசிகர்களையும், சிறுவனாக வைபவ் சூர்யவன்ஷியையும் மாற்றி, "தம்பி தம்பி.. அப்போ அப்போ பவுலர்க்ஸ் கொஞ்சம் மரியாதை கொடுத்து ஆடுப்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னா அடி அடிக்கிறான்டா ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after Rajasthan won by 7 wickets against LSG with the help of Vaibhav Suryavanshi