8 பேர் காயமான டீமை அடிச்சிட்டு சாமி போட்ட ஆட்டம் இருக்கே சுப்மன் கில்லை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்!

  • மும்பை: குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் ஆர்சிபி அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    பேட்ட படத்தில் ரஜினி தன்னை அடிக்க வருபவர்களிடம், "எவனுக்காவது உயிர் மேல ஆசை இருந்தா அப்படியே ஓடிப் போயிரு.. கொல காண்டுல இருக்கேன்.. மவனே கொல்லாம விட மாட்டேன்" என்பார். அதில் வரும் ரஜினியாக ஆர்சிபி அணியை மாற்றி, "எவனுக்காவது கப்பு, கிப்புனு ஆசை இருந்தா அப்படியே ஓடிப் போயிரு.. கொல காண்டுல இருக்கோம்.. மவனே 2வது டிராபி அடிக்காம விடமாட்டோம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

    Advertisement

    துரந்தர் படத்தில் இந்திய உளவாளியான ரன்வீர் சிங், பாகிஸ்தானில் துரந்தராக வாழ்ந்து கொண்டிருப்பார். அப்படி ஆர்சிபி அணியின் துரந்தராக சிராஜ் மற்றும் கெஜ்ரோலியா இருவரும் ஆடி வருவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடேய்களா.. கொஞ்சம் சும்மா இருங்கடா ரகம்.

    சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவை அவரின் காதலி சக்தி, "எப்பவும் பைக்கில் உர் உர்னு சவுண்ட் விடுவியே.. எங்க இப்போ சவுண்ட் விடு பார்ப்போம்" என்று பேசுவார். அதில் வரும் ஜீவாவாக சுப்மன் கில்லையும், சக்தியாக ஆர்சிபி அணியையும் மாற்றி, "லாஸ்ட் மேட்ச்ல எங்க கூட ஜெயிச்சிட்டு ஒரு கேப்சன் போட்டியே.. எங்க இப்போ போடு பார்ப்போம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டடா பம்பரக்கட்ட மண்டையா ரகம்.

    Advertisement

    இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினி, "நடுராத்திரி.. 3 மணிக்கு ஒரு அரை பீரை அடித்துவிட்டு சாமி போட்டுச்சே ஒரு ஆட்டம்.. " என்று பேசி இருப்பார். அதில் வரும் ரஜினியாக சிஎஸ்கே அணியையும், இளையராஜாவாக சுப்மன் கில்லையும் மாற்றி, "8 பேர் காயம் அடைஞ்ச டீமை அடிச்சிட்டு சாமி போட்ட ஆட்டம் இருக்கே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after RCB won by 92 runs against Gujarat in Qualifier 1 of IPL Playoffs