நம்மை காக்க வந்த தேவதூதன்டா அவன்.. வெளுத்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.. தெறிக்கும் மீம்ஸ்!

  • மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் அடைந்த வெற்றி மூலமாக பஞ்சாப் அணி பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    மகான் படத்தில் விக்ரமை பார்த்து பாபி சிம்ஹா, "நம்மளை காப்பாற்ற வந்த தேவதூதன்டா அவன்" என்பார். அதில் வரும் விக்ரமாக ஸ்ரேயாஸ் ஐயரையும், பஞ்சாப் அணியாக பாபி சிம்ஹாவையும் மாற்றி, "நம்மள காப்பாத்த வந்த தேவதூதன்டா இவன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்படியாவது பிளே ஆஃப் கூட்டிட்டு போயிருயா ரகம்.

    Advertisement

    கும்கி படத்தில் விக்ரமை பிரபுவை பார்த்து தம்பி ராமையா, "யாரு இவன.. எக்ஸ்ட்ரா சாப்பாடு கேட்டாலே போட மாட்டான் சார்.. பேட்டாவ கொடுப்பான்" என்பார். அதில் வரும் தம்பி ராமையாவாக சிஎஸ்கே அணியையும், போலீசாக பஞ்சாப் அணியையும், விக்ரம் பிரபுவாக மும்பை அணியையும் மாற்றி, "இவன்லாம்.. உங்களுக்காக இல்ல.. அவனுக்காகவே வின் பண்ண மாட்டான் சார்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்ட பங்கு ரகம்.

    அள்ளித் தந்த வானம் படத்தில் வடிவேலு, "அடப்பாவிகளா.. இந்த மண்ணெய்யை எடுத்துட்டு போனா தான்டா என் வீட்டில அடுப்பே எரியும்.. நல்லா இருப்பீங்களாடா நீங்களாம்" என்று சொல்வார். அதில் வரும் வடிவேலுவாக சச்சின் டெண்டுல்கரை மாற்றி, "அடேய்.. என் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சான்ஸ் கிடைக்கிறதே கஷ்டம்டா.. அதுலயும் கேட்ச் விடுறீங்களேடா.. நல்ல இருப்பீங்களாடா நீங்களாம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

    Advertisement

    தமிழ்ப்படத்தில் தனது அடியாளுக்கு அடிபட்டதை பார்க்க செல்லும் மம்முட்டி கதாபாத்திரம், வேற நபரிடம் மாட்டிக் கொள்ளும். அப்போது உடனிருக்கும் ஐயர், "இது நம்ம ரமணா இல்ல.. வேற ரமணா" என்பார். அதுபோல் அஜித் குமார் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் தல.. தல.. என்று அழைக்க, அதற்கு ஐயர், "இது நம்ம தல இல்ல.. வேற தல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கஷ்டப்படுத்தாதீங்கயா ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after Shreyas Iyer scored century and punjab kings won by 7 wickets against LSG