2026ஐ இஷான் கிஷன் பேருல எழுதுங்கோ ஆஃப்கனை வெளுத்துக் கட்டிய இந்தியா.. தெறிக்கும் மீம்ஸ்!

  • சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 154 ரன்களையும், இஷான் கிஷன் 125 ரன்களையும் விளாசி அசத்தியுள்ளனர். இதனை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 49.5 ஓவர்களில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 110 பந்துகளில் 2 சிக்ஸ், 22 பவுண்டரி உட்பட 154 ரன்களையும், இஷான் கிஷன் 79 பந்துகளில் 7 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 125 ரன்களையும் விளாசினர்.

    Advertisement

    இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் ஃபார்ம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதிலும் இஷான் கிஷன் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறார். டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் இஷான் கிஷன் சதம் விளாசி இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தில் தியாகுவிடம் வடிவேலு, "இப்போ நீ என்ன பண்ற.. 50 பவுன் நகை, திருமண செலவு எல்லாத்தையும் நீயே செய்ற.. சரியா" என்பார். அதில் வரும் வடிவேலுவாக இந்திய ரசிகர்களையும், தியாகுவாக சுப்மன் கில்லையும் மாற்றி, "இப்போ நீ என்ன பண்ற.. 2027 உலகக்கோப்பை முடியுற வரைக்கும் இதே ஃபார்மில் விளையாடுற.. சரியா" என்று உத்தரவிடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இந்த தடவை மிஸ் பண்ண.. நீ மிஸ் ஆகிருவ ரகம்.

    Advertisement

    கில்லி படத்தில் வெள்ளி குடத்தை அடகு வைக்கும் தாமு, நரி பேர்ல எழுதுங்கோ.. என்பார். அதுபோல் சையத் முஷ்டாக் அலி, நியூசிலாந்து டி20 தொடர், டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடரில் கேப்டன், ஒருநாள் அணியில் கம்பேக் என்று இஷான் கிஷன் தொட்டதெல்லாம் தங்கமாக மாறுகிறது. இதனால் 2026ஆம் ஆண்டை இஷான் கிஷன் பேரில் எழுதுங்கோ என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after Shubman Gill and Ishan Kishan Scored a Century against Afghanistan in the 2nd ODI