18 புள்ளி எடுத்தும் எலிமினேட்டர் ஆடுறாங்க.. பாவம்ல காவ்யா மாறன்.. நக்கல் செய்யும் சிஎஸ்கேவின் மீம்ஸ்

  • மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஆனாலும் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் 3வது இடத்திலேயே நீடிக்கிறது. இதனை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    சிவா மனசுல சக்தி படத்தில் சக்தியை பார்க்க ஜீவா செல்லும் போது, அங்கு திடீரென வரும் சந்தானம், ஒரு பெண்ணின் பேனருக்கு பி நின்று "மட்டன் குஸ்காவா" என்று வணக்கம் சொல்லி நக்கல் செய்வார். அதில் வரும் சந்தானமாக சந்தானத்தையும், அந்த பேனராக ஐதராபாத் அணியையும், சிஎஸ்கே ரசிகராக ஜீவாவையும் மாற்றி, மாக்கான் மீ.. யாருக்கு சப்போர்ட் பண்ணலாம்னு தடுமாறிய தருணம் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

    Advertisement

    சின்ன கவுண்டர் படத்தில், விஜயகாந்த் "உன்னை படிக்க வைத்த என்னோட அப்பா, என்னை படிக்க வைக்கலை பார்த்தியா" என்பார். அதில் வரும் விஜயகாந்தாக ஆர்சிபி அணியையும், படித்தவராக ஐதராபாத் அணியையும் மாற்றி, "255 ரன்கள் அடிச்சு மேட்ச் ஜெயித்தாலும் உங்களால குவாலிஃபையர் 1 போக முடியவில்லை பார்த்தியா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ பாவம் ரகம்.

    விஜய் ஆண்டனி ஒரு நேர்காணலில், ச்சே.. இவ்வளவு பண்ணியும் ஏழை வாழ்க்கை வாழ்றாங்க.. பாவம்ல என்பார். அதில் வரும் விஜய் ஆண்டனியாக சிஎஸ்கே ரசிகரை மாற்றி, "18 புள்ளிகள் எடுத்தும்.. எலிமினேட்டர் ஆடுறாங்க.. ச்சே.. பாவம்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உங்களுக்கு ஆவணும்டா ஐதராபாத் ரகம்.

    Advertisement

    திவான் படத்தில் ஆட்டோவை சினிமா ஷூட்டிங்ற்கு கொடுக்கும் வடிவேலு, "அடேய்.. என் கண்ணு முன்னாலேயே ஆட்டோவை நாறு நாறாக உடைக்கிறாங்களே" என்பார். அதில் வரும் வடிவேலுவாக சுப்மன் கில்லை மாற்றி, "என்னடா SRH.. இந்த அடி அடிக்கிறீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media after SRH won by 55 runs against RCB and to play in Eliminator in Playoffs of IPL