சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் செயல்பாடுகளை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
பிதாமகன் படத்தில் லங்கா கட்டை ஆட்டத்தில் வெல்லும் லைலா சூர்யாவிடம், தினமும் வருவீங்களா.. என் காலேஜ் பக்கத்துல என்று கேட்பார். அதில் வரும் சூர்யாவாக கவுதம் கம்பீரையும், லைலாவாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளாகவும் மாற்றி, இந்த பவுலிங் யூனுட்டை மட்டும் 2027 உலகக்கோப்பைக்கு கூட்டுட்டு வருவீங்களா என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆட விடுங்கடா கொய்யால ரகம்.
இங்கிலிஷ்காரன் படத்தில் வடிவேலுவிடம் போண்டா மணி, பாஸ் நீங்கள் சீப்பா போட்ட பிளானை, நான் சீப்பை வைத்தே முடித்துவிட்டேன் பார்த்தீங்களா என்பார். அதில் வரும் போண்டா மணியாக இந்திய பவுலர்களையும் மாற்றி, பாஸ் போன மேட்ச் 400+ கொடுத்தோம். இந்த மேட்ச் 350 தான் கொடுத்திருக்கோம். எப்படி நம்ம முன்னேற்றம் என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான். பரிதாபங்கள் சுதாகர் துபாயில் கால் வைத்த பின், ஐயோ படியெல்லாம் அதுவே நகருதே.. வெளிநாடு வெளிநாடு தான்யா என்பார். அதனை அப்படியே மாற்றி, ஐயோ ருதுராஜ்க்கு சாதகமாக அதிர்ஷ்டம்லாம் அடிக்குதே என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடி.. பிலீவர் அடிடா ரகம். தேசிங்குராஜா படத்தில் சிங்கம்புலி, டேய்.. காப்பு கட்டி இருக்கு.. யாரையும் வெட்ட கூடாது என்று சூரியவை வம்புக்கு இழுப்பார். அதில் வரும் சிங்கம்புலியாக கம்பீரையும், சூரியாக ரசிகர்களையும் மாற்றி, டேய்.. ஒருநாள் தொடரை வெயிச்சாச்சு.. யாரும் தோல்வி பத்தி பேச கூடாது என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இவன என்ன செய்யலாம்.. என் கோபம் அடங்கலடா ரகம்.