ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்!

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின் போது மின் வெட்டு ஏற்படாத சூழலில், தவெக ஆட்சியில் மின் வெட்டு தொடங்கி இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    ஆதவன் படத்தில் நீதிபதியாக வரும் முரளி, வடிவேலுவிடம் சூர்யாவை காட்டி, "உன்னை விட உன் மாப்பிள்ளை ஸ்மார்ட்டா இருக்கான்.. இனிமே அவன் சொல்றதை தான் நீ கேட்கணும்" என்பார். அதில் வரும் வடிவேலுவை திமுக ஐடி விங்காகவும், திமுக அதிகாரப்பூர்வமில்லாத ஐடி விங்கை சூர்யாவாகவும் மாற்றி, "உன்னை விட உன் மாப்பிள்ளை ஸ்மார்ட்டா இருக்கான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கொஞ்சமாச்சும் கத்துக்கோங்கடா ரகம்.

    Advertisement

    முத்து படத்தில் ராதாரவி பொன்னம்பலத்திடம், "ஜமீன்தாரை கொன்னுட்டு பழியை தூக்கி முத்து மேல போடு.. அப்புறம் முத்துவையும் போடு" என்று ஐடியா கொடுப்பார். அதில் வரும் ராதாரவியை விஜய்யாகவும், பொன்னம்பலத்தை ஆதவ் அர்ஜுனாவாகவும் மாற்றி, "திமுக சாதனைக்கு தவெக காரணம்ன்னு மேல தவெக ஸ்டிக்கரை ஒட்டு.. தவெக பன்ற தப்புக்குலாம் திமுக தான் காரணம்னு திமுக மேல ஸ்டிக்கரை ஒட்டு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இதுதான்டா அரசியல் ரகம்.

    அயன் படத்தில் வில்லன் லட்டுல வச்சேன்னு நினைச்சியா தாஸ்.. நட்டுல வச்சேன் என்பார். அதில் வரும் வில்லனாக விஜய்யை மாற்றி, "ஸ்லீப்லெஸ் நைட் ஃபார் ஹேட்டர்ஸ்க்குனு நினைச்சியா தாஸ்.. வோட்டர்ஸ்க்கு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

    Advertisement

    மார்க் ஆண்டனி படத்தில் தனது அடியாள் தாம் நிற்கும் பேருந்து மீதே பாம் போடுவதை பார்க்கும் எஸ்ஜே சூர்யா, "அடேய்.. என்னடா பன்றான் அவன்.. வண்டிக்குள்ள நானும் இருக்கேன்டா.. நிறுத்துங்கடா அவனை" என்பார். அதில் வரும் எஸ்ஜே சூர்யாவாக காங்கிரஸ் கட்சியையும், அடியாளாக தவெகவையும் மாற்றி, " அணில்ஸ் என்னடா வாரிசு அரசியல், ஊழல் பற்றிலாம் பேசுறான்.. அடேய் நானும் கூட்டணில இருக்கேன்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media due the power cut in entire tamilnadu after tvk formed government