முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!


  • சென்னை: தமிழ்நாட்டில் மின் வெட்டி பிரச்சனை தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில், முதல்வர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

    Advertisement

    ஆதி படத்தில் விஜய்யை பார்த்து வில்லன், பிடிச்சிருக்கு.. ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்வார். அதில் வரும் வில்லனாக திமுக ஆதரவாளரை மாற்றி, சிபிஐ கூட்டணியில் இருந்து வெளியேறியதை வைத்து, "அஜித் குமார் ஐயாவை விட பெரிய முதுகு குத்து வரலாறு நமக்கு தான் இருக்கும் போல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் முடியலைடா சாமி ரகம்.

    Advertisement

    12பி படத்தில் பேருந்து மாறி ஏறும் கண்டக்டர் வடிவேலுவிடம், என்னாது இந்த பஸ்ஸு தாம்பரம் போகுமா என்று சிங்கமுத்து குடும்பத்துடன் ரவுண்ட் கட்டி வெளுப்பார். அதில் வரும் வடிவேலுவாக தவெகவையும், சிங்கமுத்துவாக திமுகவையும் மாற்றி, "717 டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடிட்டோம்னு சொன்னதும் ரீல்லா" என்று கேட்டு ரவுண்ட் கட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

    போக்கிரி படத்தில் இன்ஸ்பெக்டரிடம் இருந்து கஞ்சாவை எடுத்து கஞ்சா பிஸ்னஸ் என்று விஜய் கேட்பார். ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றதை விஜய் கள்ளக்கூட்டணி என்று விமர்சித்தார். இதனால் விஜய் இப்போது பிரதமருடன் முன் வரிசையில் நின்று போஸ் கொடுத்துள்ளதை வைத்து, கள்ளக்கூட்டணி என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் இப்போ எப்படி தப்பிக்கிறதுனு தெரியலையே ரகம்.

    Advertisement

    பம்பரக்கண்ணாலே படத்தில் திருமணம் மீறிய உறவில் இருக்கும் ஒரு பெண்ணை வடிவேலு கையும் களவுமாக பிடித்தபின், ஐயோ.. என்னோட அமுல் பேபியை எதுவும் பண்ணிடாதீங்க என்று அழுவார். அதில் வரும் நபராக விஜய்யையும், அந்த பெண்ணாக தவெக நிர்வாகிகளையும் மாற்றி, "எங்க அமுல் பேபிய ஒன்னும் சொல்லாதீங்க.. அவருக்கு டைம் கொடுங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள ஆள விடுங்கடா கொய்யால ரகம்.

    English Summary

    memes: Fantastic memes from social media from DMK functionaries after CPI Left from the alliance due to Vijay