Memes: வடக்கு கல்விக்காகவும்.. தமிழகம் சினிமா டிக்கெட்டுக்காகவும் போராடும் என நினைக்கவில்லை!

  • சென்னை: டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இளைஞர்கள் திரைப்பட டிக்கெட் வாங்க தியேட்டர் வாசல்களில் சண்டையிட்டு வருகின்றனர் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இது தொடர்பான மீம்ஸ்கள் பரவலாக கவனம் பெற்றிருக்கின்றன.

    Advertisement

    சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நாதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இது குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகினற்னர்.

    Advertisement

    நீட் வினாத்தாள் இதற்கு முன்னர் 150க்கும் மேற்பட்ட முறை லீக் ஆகியிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் கோச்சிங் சென்டர் போக ஏராளமாக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இப்படி இருக்கையில் அசால்ட்டா வினாத்தாள் லீக் ஆகிவிட்டது என்று சொல்வதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது? என்று மாணவர்கள் கொந்தளித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

    கரப்பான் ஜனதா கட்சியினர் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர். போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இப்படி இருக்கையில் தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், முழுவீச்சில் நடக்கவில்லை. மறுபுறம் மாணவர்களும் இளைஞர்களும் 'ஜனநாயகன்' திரைப்பட ரிலீசில் கவனம் வைத்திருக்கின்றனர் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    இது தொடர்பான மீம்ஸ்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. "வடக்கு கல்விக்காகவும், தமிழ்நாடு ஜனநாயகன் டிக்கெட்டுக்காகவும் போராடும் என்று ஞான் சொப்பனத்திலும் கண்டதில்லை சாரே!" என்று விமர்சன போஸ்ட்டுகள் ஷேராகியிருக்கின்றன.

    அதேபோல அமைச்சர் பர்வேஸ் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார். இந்த வீடியோவை எடுத்து போட்டு.. காவிரி தண்ணீருக்காகவா? மாணவர் போராட்டத்திற்காகவா? எதற்காக இப்படி அழுகிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    அதேபோல வடக்கன்ஸ் என, வட மாநில இளைஞர்களை ஏளனமாக பேசிவிட்டு இன்று தமிழக இளைஞர்கள் ஜனநாயகன் திரைப்படத்திற்காக தியேட்டர் வாசலில் குவிந்திருக்கின்றனர். ஆனால், வட மாநில இளைஞர்கள்.. போராட்டக்களத்தில் போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டை திருப்பி போலீசார் மீதே வீசி சம்பவம் செய்து வருகிறார்கள். அவர்களையா வடக்கன்ஸ் என்று கேலி செய்தோம்? என்று கேள்வி எழுப்பி மீம்ஸ்கள் குவிந்திருக்கின்றன.

    English Summary

    Tamil Nadu: Protests against NEET have intensified in Delhi; however, criticism has arisen regarding the situation in Tamil Nadu, where young people are seen fighting outside cinema halls to buy movie tickets. Memes highlighting this contrast have garnered widespread attention.