இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா?

  • சென்னை: இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா.. ஏன்டா இப்படி சோதிக்கிறீங்க என்று கிண்டல் செய்து நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் வெளியிட்டிருக்கிறார். மே 28ம் தேதியான நாளை மறுநாள் அப்படி என்ன ஸ்பெசல்.. ஏன் ஏராளமான திருமணங்கள் வரும் வியாழக்கிழமை நடக்க போகிறது.. வைகாசியில் வந்துள்ள இந்த சுபமுகூர்த்த தினம் பற்றி பார்பபோம்.

    Advertisement

    மே 28, 2026 (வியாழக்கிழமை) ஒரு மங்களகரமான சுபமுகூர்த்த நாள் ஆகும். இது வளர்பிறை முகூர்த்தம் ஆகும். தமிழ் தேதி: வைகாசி 14, பராபவ வருடம் (வியாழக்கிழமை).

    Advertisement

    திதி: மே 28 காலை 10:03 மணி வரை துவாதசி, அதன் பின் திரயோதசி திதி (வளர்பிறை - சுக்ல பட்சம்).

    நட்சத்திரம்: காலை 10:11 மணி வரை சித்திரை நட்சத்திரம், அதன் பிறகு சுவாதி நட்சத்திரம்.

    யோகம்: காலை 10:11 மணி வரை சித்தயோகம், அதன் பின் அமிர்தயோகம்.

    சிறப்பு நிகழ்வுகள் மற்றும் விரதங்கள்:

    பிரதோஷம்: இது வளர்பிறை பிரதோஷ நாளாகவும் வருகிறது.

    அரசு விடுமுறை: அன்றைய தினம் பக்ரீத் பண்டிகை என்பதால் அரசு பொது விடுமுறை நாளாகும்.

    அக்னி நட்சத்திர நிவர்த்தி: கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    Advertisement

    நல்ல நேரம் (சுப முகூர்த்த நேரங்கள்):
    காலை நல்ல நேரம்: 10:30 AM - 11:30 AM

    மதிய நல்ல நேரம்: 12:30 PM - 01:30 PM

    கௌரி நல்ல நேரம் (மாலை): 06:30 PM - 07:30 PM

    தவிர்க்க வேண்டிய நேரங்கள் (இராகு, எமகண்டம்):
    இராகு காலம்: 01:30 PM - 03:00 PM

    எமகண்டம்: 06:00 AM - 07:30 AM

    குளிகை: 09:00 AM - 10:30 AM

    திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா மற்றும் புதிய தொழில் தொடங்க இது ஒரு மிகச் சிறந்த வளர்பிறை சுபமுகூர்த்த நாளாக மே 28ம் தேதி இருக்கிறது.

    Advertisement

    இப்படி சிறப்பு வாய்ந்த நாளாக இருப்பதால் பலரும் மே 28ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். நம்மூரில் பொதுவாக மாசி முடிந்த பின்னர் வைகாசியில் தான் திருமணம் நடத்த விரும்புவார்கள். பங்குனி, சித்திரை கோடைக்காலம் உக்கிரமாக இருக்கும் என்பதுடன், கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும்... எனவே பொதுவாக திருமணம் என்பது பங்குனி சித்திரையில் அதிகம் நடக்காது. சித்திரையில் திருமணம் சிலர் வைப்பார்கள் என்றாலும், பெரும்பாலான மக்கள் வைகாசியில் தான் திருமணம் வைக்க விரும்புவார்கள். அதுவும் வைகாசியில் வளர்பிறை முகூர்த்தமே திருமண விஷேசத்திற்கு விருப்பமான நாளாக உள்ளது. அதுபோல் அன்றைய நாள் வளர்பிறை பிரதோஷம், வியாழக்கிழமை, அரசு விடுமுறை, பள்ளி திறப்புக்கு முன் என பல அம்சங்கள் அடங்கி உள்ளதால் மே 28ம் தேதி திருமணத்திற்கு உகந்த நாளாக இருக்கிறது.

    Advertisement

    ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா.. ஏன்டா இப்படி சோதிக்கிறீங்க என்று கிண்டலாக குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். பலரும் பத்திரிக்கையை எடுத்து வந்த வண்ணம் இருப்பதை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

    English Summary

    marriage memes : In a post shared by a netizen, they jokingly posted a meme asking, "I've received 17 wedding invitations for May 28th so far... Is the world going to end in June? Why are you guys testing me like this?"