சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, சமூக வலைதளங்களிலோ நெட்டிசன்கள் தங்களின் அசாத்தியமான நகைச்சுவை உணர்வால் தற்போதைய நிலவரங்களை மீம்களாக (Memes) மாற்றி 'மீம்ஸ் திருவிழா' நடத்தி வருகின்றனர்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சில மீம்களும், அதன் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான அரசியல் எதார்த்தங்களும் இதோ..
தவெக தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், ஏற்கனவே இருக்கும் பல திட்டங்களை புதிதாக இப்போதுதான் தொடங்குவது போல தவெகவினர் பகிர்ந்து வருகின்றனர். இதனை குறிப்பிட்டு கிண்டல் செய்கிறது இந்த மீம். அடுத்து என்ன? தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே TVK.. அதானே? தவெக அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்கள், எம்.எல்.ஏக்கள் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், வைரலாகி வருகிறது இந்த மீம். அது என்னாங்கயா .. புதுசா MLA ஆனதும் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம்னு ரெய்டு போறது.. தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண்கள் புலம்புவது போல ஒரு மீம். யாரு ஆட்சிக்கு வந்தாலும் இது பெண்களுக்கான ஆட்சினு சொல்றானுங்க.. அப்போ ஆண்கள்னா என்ன அனாதையாடா? அதான் வாதியாரே எனக்கு புரிய மாட்டேங்குது.. விஜய் முதலமைச்சர் ஆவதை பொறுக்கமுடியாமல் ரஜினிகாந்த் சூழ்ச்சி செய்ததாக சில கருத்துகள் வைரலான நிலையில் ரஜினிகாந்த்தே இதனை விளக்கி பேசினார். அப்போது கமல் பற்றி அவர் பேசிய விஷயத்தை கலாய்த்து இந்த மீம்.. ஒருவேல கமல் CM ஆகி இருந்தா பொறாமை வந்து இருக்குமோ என்னவோ..?தவெக.. அதானே?
இங்க ரெய்டு போங்களேன்
அவ்வளவு நேர்மையான ஆளா இருந்தா RTO ஆபிஸ், ரிஜிஸ்டர் ஆபிஸ்னு ரெய்டு போங்களேன் பார்ப்போம்..ஆண்கள் என்ன அனாதையா?
என்ன பத்தி கேட்டாங்களா?
அவங்க என்ன பத்தி கேட்டாங்களா?