தமிழகத்தில் இன்று


ரூ. 6.5 லட்சம் அமெரிக்க டாலர் வைத்திருந்த தமாகா கவுன்சிலர் கைது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ரூ.6.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற சென்னை மாநகராட்சியின் தமிழ்மாநில காங்கிரஸ் கவுன்சிலர் பந்தல் கோவிந்தன் கைது செய்யப்பட்டார்.

வட சென்னை 23-வது வட்டத்தைச் சேர்ந்த பந்தல் கோவிந்தன், சிங்கப்பூர் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை இரவுசென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பெட்டியைச் சோதனை செய்தபோது அதில்ரூ.6.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள இருந்தன.

அதுபற்றி கணக்கு கேட்டபோது அவர் சரியான பதிலைச் சொல்லவில்லை. இதையடுத்து அவரிடம் தீவிரவிசாரணை நடத்தியபோது, ஏற்கெனவே இதுபோல் வெளிநாட்டுக் கரன்சிகளைக் கடத்திச் சென்றுள்ளதாகவும்,அது தொடர்பாக தன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பந்தல் கோவிந்தன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அமெரிக்க டாலர்கள் பறிமுதல்செய்யப்பட்டன. கோவிந்தன் மீது கோபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

Read more about: chennai airport foreign arrest
Read more...