எண்ணெய் டேங்கர்களை சுற்றி இரும்பு கூண்டை போட்ட UAE! அபுதாபியில் நடக்கும் வினோதம்! என்ன காரணம்?

  • அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் சேமிப்பு டேங்கர்களைச் சுற்றி பிரம்மாண்டமான இரும்பு கூண்டுகள் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    சமீபகாலமாக மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டின் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகளைப் பாதுகாக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இரும்பு கூண்டுகள் அமைப்பது ஏன்?

    கடந்த மே மாதம் இந்த இரும்பு வலை கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. வெடிபொருட்களை சுமந்து வந்து நேரடியாக இலக்குகளைத் தாக்கும் குறுகிய தூர தற்கொலை படை ட்ரோன்களின்தாக்கத்தை தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

    ஒரு ட்ரோன் வேகமாக வந்து எண்ணெய்க் கிடங்கின் மீது மோதும் போது, இந்த இரும்பு வலையமைப்பு ட்ரோனை நடுவழியிலேயே தடுத்து வெடிக்கச் செய்யும் அல்லது அதன் தாக்கத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் எண்ணெய் டேங்கருக்கு நேரடி சேதம் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது. அதேசமயம், அதிவேக ஏவுகணைகள் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் இந்த இரும்பு கூண்டுகளுக்குக் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    பின்னணி என்ன?

    மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடங்கிய மோதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு ட்ரோன் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது.

    மே 4 அன்று புஜைரா எண்ணெய் கிடங்கில் ட்ரோன் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இந்தியர்கள் காயமடைந்தனர். ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த அட்னாக் எண்ணெய் கப்பல் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.

    பதற்றம் தொடங்கியதில் இருந்து சுமார் 1,400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும், நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் தங்களது கண்காணிப்பு அமைப்புகள் கண்டறிந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    உலகளவில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள முறை

    எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை ட்ரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்க இரும்பு கூண்டுகள் மற்றும் வலைகளை அமைப்பது ஒன்றும் புதிய உத்தி அல்ல. ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் காப்பாற்ற ரஷ்யா இதேபோன்ற அமைப்புகளைத் தீவிரமாகப் பயன்படுத்தியது.

    முழுமையான தீர்வா?

    பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, இது ஒரு கூடுதல் அடுக்கு பாதுகாப்பு மட்டுமே தவிர முழுமையான நிரந்தர தீர்வு அல்ல. ட்ரோன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிநவீனமாக வளர்ந்து வருவதால், இதுபோன்ற இரும்பு கூண்டுகளை உடைத்துக்கொண்டு ஊடுருவும் புதிய வகை ட்ரோன்களை எதிரி நாடுகள் எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புள்ளது.

    Advertisement

    கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த செலவில் தயாராகும் ட்ரோன்கள் ஏற்படுத்தும் பெரும் சேதங்களைத் தடுக்க இத்தகைய எளிய இரும்பு கூண்டு பாதுகாப்பு முறைகள் உடனடி பலன் அளிக்கின்றன. எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகள் தங்களின் உள்கட்டமைப்பு பாதுகாப்பில் புதிய முறைகளை கையாள்வதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

    English Summary

    Why UAE Is Installing Giant Metal Cages Around Abu Dhabi Oil Tanks: Drone Threat Explained