பெங்களூர்: கனடா வர்த்தக துறை அமைச்சர் முன்னிலையில் அந்த நாட்டின் Geo AI-யின் Deepspatial நிறுவனத்துடன் ஐஐடி திருப்பதி மற்றும் 'ஒன் இந்தியா' கல்விசார் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
கனடாவின் வர்த்தக அமைச்சர் மணிந்தர் சித்து தலைமையிலான அந்த நாட்டை சேர்ந்த 300 பேர் கொண்ட குழு இந்தியாவில் மும்பை, பெங்களூரில் சுற்றுப்பயணம் செய்தது. இந்த குழுவினர் இந்தியா - கனடா இடையே மொத்தம் 34 வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களுடன் ஒன்றாக இணைந்து பணி செய்தல், முதலீடு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 300 மில்லியன் கனடிய டாலர்களாகும். இதில் 2 ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானதாகும். கனடாவின் டொராண்டோ நகரை தலைமையிடமாக கொண்ட Deepspatial நிறுவனத்தின் ஜியோ ஏஐ நிறுவனத்துடன் ஐஐடி திருப்பதி நவவிஷ்கர் ஐ- ஹப் பவுண்டேஷன் மற்றும் ஒன்இந்தியா இணையதளத்தின் கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 2 முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளன. இந்த ஒப்பந்தங்கள் கனடா வர்த்தக துறை அமைச்சர் மணிந்தர் சித்து முன்னிலையில் கையெழுத்தானது. இதுபற்றி Deepspatial நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் ராகுல் குஷ்வா கூறியதாவது: ''செயற்கை நுண்ணறிவின் மூலம் உலகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வுகள் வழங்கும் வகையில் Deepspatial நிறுவனத்தின் ஜியோ ஏஐ மூலம் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஐடி திருப்பதி நவவிஷ்கர் ஐ-ஹப் அறக்கட்டளையுடனான எங்கள் ஒப்பந்தம் என்பது ஆராய்ச்சி, புதிய கண்டுடிபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை வலுப்படுத்தும். 'ஒன்இந்தியா'வுடனான எங்களின் ஒப்பந்தம் எட்ஸ்க்எக்ஸ்பிரஸ் (edskExpress) மூலம் மாணவர்களின் கல்வி கற்றலுக்கு தேவையான உண்மையான இன்புட் மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் எழுத்தறிவு திறனை மேம்படுத்தும். பல்வேறு தொழில்நுட்பம், நிறுவனங்களின் நிபுணத்துவம், தொழில்துறை கூட்டு முயற்சிகளை இணைந்து பல்வேறு துறைகளில் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் லட்சத்தியத்திற்கு இந்த ஒப்பந்தங்கள் உதவும். இந்தியாவில் நாங்கள் தொடர்ந்து செயல்பாடுகளை விரிவுப்படுத்துவோம். சர்வதேச சந்தைகளில் வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையில் செயல் திட்டங்களாக உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்த உள்ளோம்'' என்றார். முதல் ஒப்பந்தத்தில் ஐஐடி டிஎன்ஐஎஃப் இன் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் ரோஷன் கே. ஸ்ரீவஸ்தவ் மற்றும் Deepspatial நிறுவனத்தின் நிறுவன சிஇஓ டாக்டர் ராகுல் குஷ்வா ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது ஐஐடிடிஎன்ஐஎஃப்-இன் மூத்த நிர்வாக உதவியாளர் துலிகா சஹா மற்றும் டீப்ஸ்பேஷியலின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சவுரவ் தியாகி ஆகியோர் உடனிருந்தனர். ஐஐடி திருப்பதி தொடர்பான இந்த ஒப்பந்தப்படி Deepspatial நிறுவனம் புவிசார் (Geo Technology) தொழில்நுட்பங்கள், புவியியல் தகவல் அமைப்புகள் (GIS), இருப்பிடம் மற்றும் இடம்சார்ந்த செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிவுகளில் சேர்ந்து செயல்பட உள்ளது. இதன் நோக்கம் என்பது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறமையாளர்கள் மேம்பாடு, தொழில்நுட்ப ரீதியாக வவணிகமயமாக்கல், புத்தொழில் நிறுவன உருவாக்கம் மற்றும் தொழில்-கல்வித்துறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக Deepspatial-லின் உலகளாவிய புவிசார் செயற்கை நுண்ணறிவு திட்டமான 'எக்ஸ்ப்ளூர்' என்பதை மையப்படுத்தி இருக்கும். இது 'ஸ்பின் லேப்ஸ்' நெட்வொர்க் மூலம் தொடங்கப்படும். இந்தத் திட்டம், மாணவர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் வல்லுநர்களை ஏஐ சார்ந்த சவால்களுடன் இணைத்து புவிசார் செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்டவை அறிந்து கொள்ள வழிவகுக்கும். இதுபற்றி டாக்டர் ரோஷன் கே. ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், ''ஆராய்ச்சி, இன்னோவேஷன் மற்றும் தொழில்துறையை இணைத்து, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய Geospatial மற்றும் Spatial ஏஐ தீர்வுகளை உருவாக்க Deepspatial நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியா-கனடா ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கலை விரைவுபடுத்தவும், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் கண்டுப்பிடிப்பாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு நாங்கள் செயல்பட உள்ளோம்'' என்றார். அதேபோல் 2வது முக்கிய ஒப்பந்தத்தில் 'ஒன் இந்தியா'வின் தலைமை செயல் அதிகாரி திரு. என்.ராவணன் மற்றும் டாக்டர் ராகுல் குஷ்வா ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது ஒன் இந்தியாவின் கண்டென்ட் ஸ்டேர்ட்டஜி மற்றும் மானிஸ்டைசேஷன் பிரிவின் மூத்த இயக்குநர் ஜேம்ஸ் பிஜே மற்றும் சவுரப் தியாகி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஒப்பந்தப்படி 'ஒன் இந்தியா' நிறுவனம் 'Deepspatial' மாணவர் கற்றல் மற்றும் ஊடக எழுத்தறிவு தளமான edskExpress-க்கு தினமும் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த அம்சங்களை வழங்கும். தினமும் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை மாணவர்கள் படித்து அறிந்து கொள்ளவும், ஊடக எழுத்தறிவு பழக்கங்களை வளர்த்து கொள்ள இது உதவும். 'எட்ஸ்க் எக்ஸ்பிரஸ்' என்பது நம்பகமான செய்திகளை மாணவர்களுக்கு வழங்கவும், அதுதொடர்பான கேள்விகள் கேட்டு நடப்பு நிகழ்வுகள் பற்றிய புரிந்து செயல்படவும் இயங்கி வருகிறது. இதுபற்றி ஒன் இந்தியாவின் சிஇஓ திரு.என் ராவணன் கூறுகையில், ''நம்பகமான செய்திகள் செய்தி அறையோடு நின்றுவிடக்கூடாது. அது மாணவர்களின் வகுப்பறைகளையும் சென்றடைய வேண்டும். ஒன் இந்தியா செய்திகளை உருவாக்குவதையே தொழிலாக வைத்துள்ளது. நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். நேர்மறையான செய்திகள் என்பது Soft-னா செய்திகள் கிடையாது. அது ஒரு இளம் வாசகருக்கு அது எப்படி பலன் அளிக்கிறது? அதனால் எப்படியான மாற்றம் ஏற்படுகிறது என்பதை பார்க்கிறோம். ஒரு விஷயத்தை செயல்படுத்தும்போது தான் மாற்றம் சாத்தியம் என்ற உணர்வு வரும். 'எட்ஸ்க் எக்ஸ்பிரஸ்' உடனான எங்களது பணியின் பின்னணியும் இதுதான். மாணவர்கள் நம்பகமான செய்திகளை படித்து அவற்றை கேள்விக்கு உட்படுத்தி தங்களின் சொந்த கருத்துகளை எழுதுகிறார்கள். ஊடகத்தின் தொடக்கமே இதுதான்'' என்றார். இதுபற்றி குளோபல் அஃபயர்ஸ் கனடா (கனடாவின் சர்வதேச விவகாரத்துறை) வெளியிட்டுள்ள செய்தியில், ''கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய கனடா டீம் இதுதான். மும்பையில் 11 மற்றும் பெங்களூருவில் 23 என மொத்தம் 34 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் விண்வெளி, தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள், உயிரி அறிவியல், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தறைகளை உள்ளடக்கி உள்ளது. டாடா ப்ராஜெக்ட்ஸ், ஜிஎம்ஆர் ஏரோ டெக்னிக், அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட், கேபிஎம்ஜி இந்தியா, ஆதித்யா பிர்லா இன்சுலேட்டர்ஸ் மற்றும் அப்பல்லோ ஹெல்த் ரிசோர்சஸ் ஆகிய இந்திய நிறுவனங்களும், ஐஐடி திருப்பதி, ஐஐஎஸ்இஆர் திருப்பதி மற்றும் ஐஐடி ரூர்க்கி போன்ற கல்வி நிறுவனங்களும் இதில் பங்கெடுத்துள்ளன'' என கூறியுள்ளது.2 ஒப்பந்தங்களின் பின்னணி
ஐஐடி திருப்பதி உடன் ஒப்பந்தம்
ஐஐடி திருப்பதி ஒப்பந்தத்தின் நோக்கம்
'ஒன் இந்தியா' உடன் ஒப்பந்தம்
'ஒன் இந்தியா' சிஇஓ பேச்சு
எந்தெந்த துறைகளில் ஒப்பந்தம்