உல்லாசமாக இருக்கலாம் வா.. டேட்டிங் செயலி தோழியை அழைத்த நபர்.. கடைசியில் நடந்த சம்பவம்

  • பெங்களூர்: தோழி என்று திருநங்கையிடம் பேசிய 42 வயது நிரம்பிய ஆண் ஒருவர் அவரை உல்லாசத்துக்கு அழைத்தார். அப்போது அந்த திருநங்கை இன்னொருவடன் வந்து வீடு புகுந்து 226 கிராம் தங்க நகைகளை அள்ளி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

    Photo Credit:

    பெங்களூர் நாகரபாவியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரோஹித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அக்டோபர் 21ம் தேதி ரோஹித் மனைவி தமிழகத்துக்கு சென்றார். அதன்பிறகு ரோஹித் எசரகட்டா அருகே உள்ள சொந்த வீட்டிற்கு சென்றார்.

    அப்போது ரோஹித்தை, 42 வயது நிரம்பிய திலக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொடர்பு கொண்டு பேசினார். நாகரபாவியில் உள்ள வீட்டில் ஒருநாள் தங்க அனுமதி கோரினார். நண்பன் தானே என்று ரோஹித்தும் வீட்டு சாவியை திலக்கிடம் வழங்கினார்.

    அன்றைய தினம் திலக் மட்டும் நாகரபாவியில் உள்ள ரோஹித்தின் வாடகை வீட்டில் இருந்தார். அப்போது Grindr ஆன்லைன் செயலியில் பழக்கமான தோழி ஒருவரை வீட்டிற்கு அழைத்தார். இரவில் இருவரும் நெருக்கமாக இருக்கலாம். பேசி கொண்டிருக்கலாம். உல்லாசம் அனுபவிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

    இதையடுத்து இரவு 10.30 மணிக்கு முகமூடி அணிந்து வீட்டிற்கு ஒருவர் வந்தார். தனது தோழி என்று திலக் நினைத்து கதவை திறந்தார். அப்போது தான் அது பெண் இல்லை. திருநங்கை என்பது தெரியவந்தது. இதனால் திலக் அதிர்ச்சியடைந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்த திருநங்கை இன்னொரு திருநங்கைக்கு போன் செய்து வரவழைத்தார்.

    அதன்பிறகு ஒரு திருநங்கை கத்தியை காட்டி திலக்கை மிரட்ட இன்னொரு திருநங்கை வீட்டில் இருந்து 226 கிராம் தங்க நகைகளை அள்ளினார். அதன்பிறகு இரு திருநங்கைகளுடன் நகைகளுடன் எஸ்கேப் ஆகினர். இதுபற்றி திலக், நண்பன் ரோஹித்திடம் கூறினார். இதையடுத்து சந்திரா லே-அவுட் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் எண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்து வருகின்றனர்.

    English Summary

    A 42-year-old man addressed a transgender person as a "friend" and invited her for a sexual encounter. Subsequently, the transgender person arrived accompanied by another individual, entered the man's home, and made off with 226 grams of gold jewelry.