கள்ளக்காதலை கைவிடாத கணவர்.. 21 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. உயிரே போச்சே

  • பெங்களூர்: கணவர் இன்னொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்ததால் மனம் உடைந்த 21 வயது பெண் 7 மாத குழந்தையின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

    Advertisement

    சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சரண் கவுடா என்ற நாகராஜ். இவர் டிரைவர் பணி செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி பெயர் சானிகா கவுடா (வயது 21).

    Advertisement

    இந்த தம்பதிக்கு பிறந்து 7 மாதங்களே ஆன ஒரு குழந்தை உள்ளது.. இதற்கிடையில், சரண் கவுடாவுக்கு இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    இதுபற்றி , சானிகா அறிந்து கொண்டார்.

    கள்ளத்தொடர்பை கைவிடும்படி சரண் கவுடாவிடம், மனைவி சானிகா கூறினார். ஆனால் சரண் கவுடா கேட்கவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சானிகா பெங்களூர் ராயச்சந்திராவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அதன்பிறகு, அவர் சிக்கமகளூருவுக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் சானிகா வாட்ஸ் அப்பில் கணவர் சரண் கவுடாவிற்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது கணவர் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேசுவதை விட்ட சானிகா, மின்விசிறியில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பரப்பன அக்ரஹாரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சானிகாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

    Advertisement

    அப்போது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. அதாவது கள்ள காதலியுடன் பேசிய ஆடியோவை மனைவி சானிகாவுக்கு, சரண் கவுடா அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆடியோவை கேட்ட சானிகா கடும் கோபமடைந்துள்ளார்.

    இன்னும் கள்ளக்காதலை தொடர்கிறாயா? என்று திட்டியுள்ளார். அதன்பிறகு வாட்ஸ் அப் போன்காலை கட் செய்த சானிகா அதிகாலை 3 மணியளவில் 7 மாத குழந்தைகளின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சானிகா, தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    A 21-year-old woman, heartbroken over her husband's extramarital affair, committed suicide by hanging herself in front of her seven-month-old baby in Bengaluru.