4 பெண்களின் உயிரை பறித்த பிரிட்ஜ்.. விநாயகர் பூஜைக்கு பின் நேர்ந்த சோகம்

  • பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிவிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பிரிட்ஜ் பக்கத்தில் படுத்து தூங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக பிரிட்ஜ் வெடித்து சிதறியதில் 4 பெண்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.

    Advertisement

    கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சாவத் ஹள்ளியில் வசித்து வருபவர் கஜனன் தாமோனி. இவரது மனைவி பெயர் சாரதா( 50). இந்த தம்பதிக்கு கங்கா (25), பிரியா (24) என்ற மகள்களும், ரோஷன் (21) என்ற மகனும் உள்ளனர். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் கஜனனின் சகோதரி பாரதி ( 50) வீட்டிற்கு வந்தார்.

    Advertisement

    இவர்கள் 6 பேரும் நேற்று வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அவர்கள் அனைவரும் இரவில் டின்னரை ஒன்றாக சாப்பிட்டனர்.

    அதன்பிறகு வீட்டில் அவர்கள் படுத்து தூங்கினர். இவர்கள் அனைவரும் பிரிட்ஜ் அருகே வழக்கம்போல் தூங்கினர். நள்ளிரவில் 2.15 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கண்விழித்து ஓடிப்போயினர். அப்போது கஜனனின் வீடு தீப்பற்றி எரிந்தது.

    உடனடியாக அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். வீட்டுக்குள் நுழைந்து கஜனன் மற்றும் ரோஷன் ஆகியோரை மீட்டு வந்தனர். ஆனால் அதற்குள் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் மற்றவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால் மற்ற 4 பேரும் உடல் கருகி இறந்தனர். கஜனனின் மனைவி சாரதா, மகள்களான கங்கா, பிரியா, சகோதரி பாரதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    Advertisement

    கஜனன் மற்றும் ரோஷன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 2 பேரின் உடலிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் வசித்து வந்த வீட்டின் மேற்கூரை காண்கிரீட் கிடையாது. இதனால் மேற்கூரை மொத்தமாக சேதமடைந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், ''முதற்கட்ட விசாரணையில் பிரிட்ஜ் வெடித்து தான் 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்ஜ் வெடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மின்கசிவு அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக விநாயகர் சிலை என்பது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து மின்கசிவு ஏதாவது ஏற்பட்டதா? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றனர்.

    English Summary

    After celebrating Vinayagar Chaturthi in Karnataka, six members of the same family were sleeping near a refrigerator. Unexpectedly, the refrigerator exploded, tragically killing four women whose bodies were mangled in the blast.