பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம்

  • பெங்களூர்: "ஆபீஸ்ல இருந்து வெறும் 10 கிலோமீட்டரில் தான் இப்போ இருக்குறேன். சரி ஆபீஸுக்கு இன்னும் கொஞ்சம் பக்கத்துல போகலாமே.. டைம் மிச்சமாகுமேனு, ஒரு கேட்டடு சொசைட்டியில் 1 BHK பிளாட் தேடுனேன். ஆனா அங்க வாடகை 40 ஆயிரம்னு போட்டிருந்ததை பாத்துட்டு ஷிப்ட் ஆகுற பிளானையே டிராப் பண்ணிட்டேன். டெய்லி 2 மணி நேரம் டிராபிக்கில் போனா என்ன? அதான் நாம ஆல்ரெடி கவர்மென்டுக்கு லட்சக்கணக்குல வரி கட்றோமே. கொஞ்ச நேரத்த ரோட்ல ஸ்பென்ட் பண்ணுவோம்" என்று - பெங்களூருவில் பணியாற்றும் பெண் ஒருவர் போட்ட பதிவு சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    "ஐடி சிட்டி" என்று அழைக்கப்படும் பெங்களூருவில் வேலை பார்ப்பது பலரின் கனவு. ஆனால், அங்கு தங்கி வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும், அந்த ஊரின் டிராபிக் மற்றும் வாடகை கொடுமை என்னவென்று! தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பெண்ணின் பதிவு, பெங்களூருவின் தற்போதைய எதார்த்த நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

    Advertisement

    அந்தப் பெண், தனது அலுவலகத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் வசித்து வருகிறார். தினமும் டிராபிக்கில் சிக்கித் தவிப்பதற்குப் பதில், அலுவலகத்திற்கு இன்னும் அருகிலேயே வீடு எடுத்துத் தங்கலாம் என முடிவெடுத்துள்ளார். இதற்காக ஒரு 'கேடட் சொசைட்டி'யில் (Gated Society) 1 BHK பிளாட் தேடியபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்தச் சிறிய வீட்டின் வாடகை மட்டும் மாதம் 40 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதைப் பார்த்து மிரண்டு போன அந்தப் பெண், "1 BHK-க்கு 40 ஆயிரம் ரூபாயா? இதற்குப் பேசாமல் தினமும் 2 மணி நேரம் டிராபிக்கிலேயே இருந்துவிட்டுப் போகலாம். ஏற்கனவே அரசுக்கு லட்சக்கணக்கில் வரி கட்டுகிறோம், அந்த வரிக்கு கைமாறாக கொஞ்ச நேரம் ரோட்டிலேயே நேரத்தைச் செலவிடுவோம்" என நக்கலாகப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

    Advertisement

    2026-ம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி, பெங்களூருவின் முக்கிய ஐடி காரிடார்களான மாரத்தஹள்ளி, சர்ஜாபூர், ஒயிட்ஃபீல்டு மற்றும் மான்யதா டெக் பார்க் பகுதிகளில் வாடகை விண்ணைத் தொட்டுள்ளது. மெட்ரோ பணிகள் ஒருபுறம் நடந்தாலும், சாலைகளில் வாகன நெரிசல் குறைந்தபாடில்லை. இது ஒருபுறம் எனில், ஒரு ஐடி ஊழியர் தனது சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதத்தை வாடகைக்கே செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 10 கி.மீ தூரத்தைக் கடக்க இப்போதும் 1.5 முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. இதனால், "வீட்டு வாடகைக்குச் சம்பளத்தைக் கொடுப்பதை விட, டிராபிக்கில் பொறுமையாகப் போவதே மேல்" என்கிற மனநிலைக்குப் பல ஊழியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    Advertisement

    பெங்களூருவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாடகை கட்டுப்படுத்தப்படவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. "வாடகை ஒரு பக்கம் வாட்டுகிறது, டிராபிக் மறுபக்கம் சோதிக்கிறது. இதில் வரி வேறு கட்ட வேண்டுமா?" என்பதே அந்தப் பெண்ணைப் போன்ற பல நடுத்தர வர்க்க ஊழியர்களின் குமுறலாக இருக்கிறது. பெங்களூருவின் இந்த 'வாடகை - டிராபிக்' யுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

    பெங்களூர் போலவேதான் சென்னையில் திநகர், மாம்பலம்,மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, துரைப்பாக்கம், கீழ்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளிலும் வாடகை மிக அதிகமாக உள்ளது. அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே உள்ளது. ஆனால் பெங்களூருவுடன் ஒப்பிடும் போது, சென்னையில் நெரிசல் குறைவுதான். மின்சார ரயில் காரணமாகவும், மெட்ரோ ரயில் காரணமாகவும் தப்பி வருகிறோம். பெங்களூரில் வாடகையும், நெரிசலும், சென்னையைவிட இரு மடங்கு அதிகமாகவே இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

    English Summary

    "I currently live just 10 km away from my office. Thinking I could save time by moving a bit closer, I looked for a 1BHK flat in a gated community. However, upon seeing the rent listed at ₹40,000, I dropped the idea of ​​moving altogether. So what if I spend two hours in traffic every day? After all, we already pay lakhs in taxes to the government" - A Bengaluru women