பெங்களூரில் 5ஆம் தேதி 7வது உலகத் திருக்குறள் மாநாடு.. இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி பங்கேற்பு

  • பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்​களூரில் உள்ள‌ செயிண்ட் ஜோசப் பல்கலைக்​கழகத்​தில் வரும் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 7வது உலகத் திருக்​குறள் மாநாடு நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்டில் இஸ்ரோ முன்​னாள் திட்ட‌ இயக்​குநர் மயில்​சாமி அண்​ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

    Advertisement

    பெங்களூர் செயிண்ட் ஜோசப் பல்​கலைக்​கழகம், பெங்களூர் திரு​வள்​ளுவர் சங்​கம் மற்றும் தாய்​ மொழி கூட்​டமைப்பு இணைந்து வரும் ஜூலை 5 ஆம் தேதி 7-வது உலக திருக்​குறள் மாநாட்டை நடத்துகின்றன. பெங்களூர் லால்பாக் ரோட்டில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் பல்​கலைக்​கழகத்​தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த மாநாடு நடை​பெறும்.

    Advertisement

    இந்த மா​நாட்​டில் இஸ்ரோ முன்​னாள் திட்ட‌ இயக்​குநர் மயில்​சாமி அண்​ணாதுரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்​பின் தலை​வர் நாராயண கவு​டா, செயின்ட் ஜோசப் பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தர் விக்​டர் லோபோ உள்​ளிட்​டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த மாநாட்​டில் வெளி​நாடு​களைச் சேர்ந்த திருக்குறள் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், பேராசிரியர்​கள், மாணவர்​கள் ஏராளமானோர் கலந்து கொள்​கின்​றனர். ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு நூலாக ''திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்" நூலை பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, பெங்களூர் திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ்.டி. குமார் பெற்றுக் கொள்கிறார்.

    Advertisement

    திருக்குறள் சேர, சோழ, பாண்டியர் அரங்கத்தில் 60க்கும் மேற்பட்ட திருக்​குறள் தொடர்​பான ஆய்வுக் கட்டுரைகளை தமிழ் பேராசிரியர்கள் சமர்ப்பிக்க உள்ளனர். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள், கண்ணாடிப் பேழையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. திருக்குறளை மொழி பெயர்த்தவர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து, தமிழ்நாடு, வெளிநாடு, முக்கிய தமிழ் ஆர்வலர்களுக்கு சிறப்பு செய்யப்படும். மாநாட்டு அரங்கில் அமைப்புக்களின் பெயர்களை அறிவித்து சிறப்பு செய்யப்படும். திருக்குறளையொட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்புக்கு: +91 93437 65448

    English Summary

    The 7th World Thirukkural Conference is scheduled to be held on Sunday, July 5th, at St. Joseph University in Bengaluru, Karnataka. Several dignitaries, including Thennarasu (Tamil Nadu Minister for Non-Resident Tamils ​​Welfare) and Mylswamy Annadurai (former ISRO Project Director), will participate in the conference.